உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீனாவுடன் தைவான் ஒன்றிணைவதை யாராலும் தடுக்க முடியாது: சீன அதிபர் திட்டவட்டம்

சீனாவுடன் தைவான் ஒன்றிணைவதை யாராலும் தடுக்க முடியாது: சீன அதிபர் திட்டவட்டம்

பீய்ஜின்: சீனாவுடன் தைவான் ஒன்றிணைவதை யாராலும் தடுக்க முடியாது என சீன அதிபர் ஜிஜிங்பிங் புத்தாண்டு செய்தியாக சீன மக்களுக்கு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கிழக்கு ஆசியாவில் தென் சீன கடல், கிழக்கு சீன கடல், பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவற்றுக்கு மத்தியில் இருக்கும் தீவான தைவான் நாட்டை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மேலும் தைவான் தனி நாடு அல்ல; அது சீனாவின் ஒரு பகுதி என்று தொடர்ந்து சீனா சொல்லி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்ப தெரிவித்து வருகிறது.இந்த நிலையில் திடீரென தைவான் தீவை சுற்றிலும் கடல் பகுதியில் சீன ராணுவம் போர் ஒத்திகையை துவங்கியதுடன், விமானப்படை மற்றும் கடற்படை பயிற்சிகளை மேற்கொண்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த பரபரப்பான சூழ்நிலையில் புத்தாண்டையொட்டி சீன அதிபர் ஜிஜிங்பிங் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில், தைவானில் உள்ள மக்களும் சீன மக்களும் ஒரே குடும்பம். எங்கள் இரத்த உறவுகளை யாராலும் துண்டிக்க முடியாது, எனவே தாய்நாட்டுடன் தைவான் மீண்டும் ஒன்றிணைப்பதற்கான வரலாற்றுப் போக்கை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

பெரிய ராசு
ஜன 01, 2025 11:13

நினைப்புதான் பொலெப்பே கெடுக்குது ஒரு நாளும் நடக்காது தைவான் தனி நாடு


veeramani
ஜன 01, 2025 10:50

ஏம்பா சிவப்பு கோடி சீனாவே?? உனக்கு பக்கத்தில் இருக்கும் எல்லா குட்டி நாடுகளையும் ஏப்பம் விட நினைக்கிறாய்? மில்கி வாய் காலக்ஸியில் உள்ள கடவுள் விரைவில் தண்டனை கொடுப்பான்


MUTHU
ஜன 01, 2025 09:27

இவரு அந்த ஊரு திராவிட மாடல் தலைவர் போல. செய்யாததையும் செய்யமுடியாததையும் பேசித்திரிவது என்பது தான் திராவிட மாடல்


ManiK
ஜன 01, 2025 08:23

உலகின் மோசமான சர்வாதிகாரி இவன்தான், உமைகுசும்பன். சினா தவிர பல நாடுகளின் நாடித்துடிப்பு இவன் கையில். ட்ரம்பு தான் வைக்கனும் இவனுக்கு ஆப்பு.


Kasimani Baskaran
ஜன 01, 2025 08:08

அக்ஷய் ஷின் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதிகள் இந்தியாவினுடையது. இந்தியாவும் இது போல குறைந்தபட்சம் பாகிஸ்தானையாவது அடித்து உடைக்க வேண்டும்.


SANKAR
ஜன 01, 2025 08:45

already done in 1971


Venkatesan Srinivasan
ஜன 01, 2025 10:48

பாக்கிஸ்தானில் இருந்து குறைந்த பட்சம் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விடுவித்து நம்முடன் இணைத்து கொள்ள வேண்டும். எச்சரிக்கை நிலப்பரப்பு மட்டுமே. அங்கு ஆக்கிரமித்து குடியேறியுள்ள பாக்கிஸ்தானிகளை விரட்ட வேண்டும். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே.


நிக்கோல்தாம்சன்
ஜன 01, 2025 06:38

அபகரிப்பது திராவிட கட்சியின் கோட்பாடு அதனை எப்படி ஜின்குபின்க்கு பாலோ பண்ணுறான் ?


GMM
டிச 31, 2024 22:44

சீனாவுடன் தைவான் ஒன்றிணைவதை தடுத்தால், சீனா தைவானுடன் இணைந்து விடும். ஆசியாவில் கம்யூனிஸ்ட் அஸ்தமிக்க துவங்கிவிடும். ஓ கே வா சீனா அதிபரே .


R. SUKUMAR CHEZHIAN
டிச 31, 2024 22:31

அக்ஷய் சின் பாரததுடன் இணைவதையும், திபெத் சுதந்திர நாடாவதையும் கூட யாராலும் தடுக்க முடியாது. ஜெய் ஹிந்த்???


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை