உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணியில் யாரும் அடிமையில்லை: இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

கூட்டணியில் யாரும் அடிமையில்லை: இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி

சென்னை: '' யாரும் , யாருக்கும் அடிமையில்லை என இபிஎஸ்க்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், '' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பேசலாமா

சென்னையில் மார்க்சிஸ்ட் சார்பில் நடந்த கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் நூற்றாண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சமீப காலமாக இபிஎஸ்க்கு, கம்யூனிஸ்ட்கள் மேல் பாசம் பொத்துக் கொண்டு வருகிறது. நாட்டில் யார் யார் எதைப் பற்றி பேசுவது என்பது இல்லை. கண்டதெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டனர். அடிமைத்தனத்தை பற்றி இபிஎஸ் பேசலாமா? அவருக்கு நான் சொல்லிக் கொள்வது எல்லாம், இங்கு யாரும் யாருக்கும் அடிமையில்லை.

சந்தேகம்

இபிஎஸ் செய்தித்தாள் படிக்கிறாரா என அனைவருக்கும் சந்தேகம் உள்ளது. இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகையை படிக்கும் பழக்கம் இருக்காது. படித்து இருந்தால் இப்படி பேச மாட்டார். அக்கட்சி தலைவர்கள் டிவி விவாதங்களில் பேசுவதை பார்க்கிறேன். அக்கட்சியினர் சுட்டிக்காட்டுவதில் உடன்பாடானது எது என்பதை பார்த்து நடவடிக்கை எடுக்கிறேன். கூட்டணி இருக்கிறது என்பதற்காக அவர்கள் சுட்டிக்காட்டாமல் இருந்தது இல்லை. சுட்டிக்காட்டுவதினால் நான் புறக்கணித்ததும் இல்லை.எங்களின் பாதி கம்யூனிஸ்ட். எனது பெயரே ஸ்டாலின் தான். நட்பு சுட்டல் எது? உள்நோக்கத்துடன் பரப்பப்படும் அவதூறு எது? என்பதை பிரித்து பார்க்க தெரியும். கொள்கை தெளிவும், நட்பின் புரிதலும் கொண்டவர்கள் நாங்கள்.

ஒற்றுமை

ஏகாதிபத்திய சதி என்பது போர் தொடுப்பது மட்டும் அல்ல. இந்தியாவுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீத வரி விதித்தது இதே சதிதான். இதனை பாஜ அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். பிரதமர் மோடி வெளிப்படையான பதிலளிக்க வேண்டும். 5வது சுற்று வர்த்தக பேச்சு முடிந்து 6வது சுற்று பேச்சு நடக்க உள்ள நிலையில், எதற்காக டிரம்ப் தன்னிச்சையாக வரியை உயர்த்த வேண்டும். இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என டிரம்ப் தொடர்ச்சியாக சொல்லி வருகிறார். இது குறித்து பார்லிமென்டில் கேள்வி கேட்டால் பிரதமர் பதில் சொல்லவில்லை. இது பலவீனத்தின் அடையாளம். ஏகாதிபத்திய சதியை முறியடிக்க இதேபோன்ற ஒற்றுமையுடன் நாம் இருக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

பேசும் தமிழன்
ஆக 13, 2025 07:31

அடிமைகள் அத்தனை பேரும் வெளியே அப்படி தான் சொல்ல சொன்னார்களா ?? அவர்கள் உங்களுக்கு முட்டு கொடுக்கும் விஷயத்தை பார்த்தாலே தெரியும் இண்டி கூட்டணியில் அவர்களின் நிலமை !!!


Shivakumar
ஆக 13, 2025 04:01

யாருக்கும் யாரும் அடிமை இல்லை என்றால் திருமாவுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்திருக்கலாமே.. ஏன் செய்யவில்லை...??


பேசும் தமிழன்
ஆக 13, 2025 07:33

அப்படியே இரண்டு உண்டியல் குலுக்கிக்களுக்கும் துணை முதல்வர் பதவி கொடுத்து விடுங்கள். கூடவே இத்தாலி பப்பு. அவருக்கும் ஒரு துணை முதல்வர் பதவி கொடுத்து விடுங்கள். அப்போது நம்புகிறோம் அவர்கள் அடிமை இல்லை என்று !!!


Barakat Ali
ஆக 12, 2025 23:00

அப்போ பிளாஸ்டிக் சேர் போட்டதெல்லாம் ???? நவீன தீண்டாமை இல்லீங்களா ????


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 12, 2025 22:39

அப்போ பிளாஸ்டிக் சேர் யாருக்கு ?


panneer selvam
ஆக 12, 2025 22:25

Stalin ji , your alliance partners are not slaves but family servants on payroll .


Natarajan Ramanathan
ஆக 12, 2025 21:25

திருமாவை உனக்கு பக்கத்தில் சோபாவில் அமரவைத்துவிட்டு இதை நீ சொல்லு.


Murugesan
ஆக 12, 2025 21:09

25 கோடி கொடுத்த, தைரியமான ஆளாக இருந்தால் தனியாக போட்டி போடு


hariharan
ஆக 12, 2025 21:03

அப்படின்னா அந்த பிளாஸ்டிக் சேர்?


Kjp
ஆக 12, 2025 21:00

எப்படி இருந்தாலும் கம்யூனிஸ்டுகள் திமுகவின் அடிமைதான். பொட்டி வாங்கிட்டாலே அடிமைதான். பழனிச்சாமிக்கு கூடும் கூட்டத்தை பார்த்து பயம் வந்துவிட்டது. கூடா நட்பு கேடாய் முடியும் என்று காங்கிரஸில் இருந்து கழன்று கொண்டீர்கள். அப்புறம் திரும்பவும் காகரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டீர்கள். நீங்கள் எவ்வளவு காலம் காங்கிரசுக்கு அடிமையாக இருந்தீர்கள் என்று எல்லோருக்கும் தெரியும். எங்கே கம்யூனிஸ்ட் கழன்று விடும் என்று என்ன பயத்தில் மாநாட்டில் கம்யூனிஸ்டுகளை தாஜா செய்கிறீர்கள். சாதனை சாதனை என்று பீற்றிக் கொள்ளும் நீங்கள் தனியாக நிக்க ஏன் பயப்படுகிறீர்கள். அது உங்களால் முடியாது. உங்கள் உயரம் என்னவென்று உங்களுக்கு நன்றாகவே தெரியும்.


திகழ்ஓவியன்
ஆக 12, 2025 20:58

எடப்பாடி


guna
ஆக 12, 2025 21:39

திகழ்ஓவியம் யாருக்கும் அடிமை இல்லை


Kumar Kumzi
ஆக 12, 2025 22:02

என்ன தான் முட்டு குடுத்தாலும் இன்பநிதிக்கு நீ சலூட் தான் அடிக்கணும் கொத்தடிமையே


புதிய வீடியோ