உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் யாரும் நிம்மதியாக இல்லை

தமிழகத்தில் யாரும் நிம்மதியாக இல்லை

பா.ஜ.,வை பொறுத்தவரையில் தேசிய கட்சியாக, நாட்டையும் கட்சியும் முன்னிலைப்படுத்தும் கட்சி. தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதில் அனைவரும் ஒருமித்த கருத்துடன் உள்ளனர். தி.மு.க., அரசு, நாளுக்கு நாள் மக்கள் மனங்களில் இருந்து கீழ் இறங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், இனிமேல் தி.மு.க., கூட்டணி ஒற்றுமையாக இருக்காது. கூட்டணியில் இருந்து, பல கட்சிகள் வெளியேறும் காலம் வந்து விட்டது. அதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கி உள்ளன. இதே நிலையில் சென்றால், தி.மு.க.,வின் அரசியல் வரலாற்றில், வரும் 2026 தேர்தலில் மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும். தமிழக பெண்கள், தங்களுக்கு இங்கே பாதுகாப்பில்லை என நினைக்கின்றனர். அதேபோல தமிழகத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிகளும் சொல்ல முடியாத அளவுக்கு படு பாதாளத்துக்கு சென்றுள்ளது. யாரும் நிம்மதியாக இல்லாத நிலையில் தி.மு.க., வெற்றி பெறுவது இயலாத காரியம். - அண்ணாமலை, முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Venkatesh
ஜூலை 23, 2025 18:50

வடநாட்டுக்காரனே இங்கதான் இருக்க முடியுமென்று இங்கேயே செட்டில். ஆகிட்டானுங்க..உமக்கு அப்படி நிம்மதி வேணும்னா வட நாட்டு பக்கம் ஓடிபோய் பாணி பூரி விற்று பிழைத்துக்கொள்.. அனைத்து துறைகளும் கீழ் நோக்கி செல்வதற்கு காரணம் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையே..


Thomas
ஜூலை 23, 2025 18:15

மறுபடியும் டூப்ளிகேட் சாட்டையாலே அடிச்சுக்கோங்க.


Mahendran Puru
ஜூலை 23, 2025 13:44

ஆமாங்க. பாஜகவினர் யாரும் தமிழகத்தில் நிம்மதியாக இல்லை. இவர் கஷ்டப்பட்டு தன்னைத் தானே இன்றியமையாதவராக காட்டிக் கொண்ட பிம்பம் கலைந்து, ஐ டி செல் பசங்களையும் வேறு வேலை தேடிக்கச் சொல்லி அனுப்பி விட்டாராம். நிம்மதியாக இல்லை. கோயில் கொடிமரத்தில் முட்டி முட்டி அழுதாலும் நிம்மதி கிடைக்குமா தெரியவில்லை.


rameshkumar natarajan
ஜூலை 23, 2025 10:49

I Think he is talking about BJP members. How they will be peaceful, when the GDP and Percapita income of tamil nadu is exceeding most of the bjp ruled states.


V RAMASWAMY
ஜூலை 23, 2025 10:02

குறிப்பாக சனாதன ஹிந்துக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை