உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு

லீவு எடுத்து போராடினால் சம்பளம் கிடையாது: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு

சென்னை:'விடுப்பு எடுத்து போராடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்யப்படும்' என, தலைமை செயலர் முருகானந்தம்உத்தரவிட்டுள்ள நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளதாக 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு அறிவித்துள்ளது.முதல்வர் ஸ்டாலின் 2021 சட்டசபை தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதியின்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; சரண் விடுப்பு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது.

அறிவுறுத்தல்

சரண் விடுப்பு சலுகை, 2026 ஏப்ரல் 1 முதல் மீண்டும் வழங்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை, அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், போராட்டத்தை தீவிரப்படுத்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் திட்டமிட்டு உள்ளனர்.இதையறிந்த அரசு, போராட்டத்தை முடக்கும் வகையிலான நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது. அதன்படி, 'விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்' என, தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த உத்தரவை பின்பற்றும்படி, அனைத்து துறை செயலர்கள், துறை தலைவர்கள், கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், தங்கள் போராட்ட வியூகத்தை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாற்றியுள்ளனர்.அதன்படி, அரசு விடுமுறை நாளான 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அரசு ஊழியர், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ வாயிலாக, மாநிலம் தழுவிய உண்ணாவிரதப் போராட்டம் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை காமராஜர் சாலையில் உள்ள எழிலகம் வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கவுள்ளது. கோரிக்கைகளை வென்றெடுக்க, அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அணி திரண்டு வர வேண்டும் என, அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தர்ணா போராட்டம்

இதேபோல, அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்களின் கூட்டமைப்பான, 'போட்டா - ஜியோ' வாயிலாகவும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்ட அளவில், 24ம் தேதி ஆலோசனை கூட்டமும், ஏப்ரல் 3ம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடக்கவுள்ளது. ஏப்ரல் 25ம் தேதி, மாநில அளவிலான தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

c.mohanraj raj
மார் 21, 2025 01:26

முதலில் ஓய்வு பெறும் வயதை 58 ஆக அறிவித்து அவர்களுக்கு பண பலன்களை கொடுத்து வீட்டுக்கு துரத்தி விட வேண்டும் இளைஞர்களை வேலையில் சேர்க்க வேண்டும் ஆனால் இதில் போராடுபவர்கள் யாராவது லஞ்சம் வாங்க கூடாது என்று சொல்கிறார்களா பாருங்கள் கடமை சரியாக செய்ய வேண்டும் என்று சொல்கிறார்களா பாருங்கள்


RAVINDRAN.G
மார் 20, 2025 15:00

அவனவன் வேலை கிடைக்காம கஷ்டப்பட்டுக்கிட்டு தனியார் வேலையில் கிடைக்கிற சம்பளத்துக்கு வேலை பார்க்குறாங்க. இவங்களுக்கு சம்பளம் பத்தவில்லை பழைய ஓய்வூதியம் வேணும்னு போராட்டம் பண்றாங்க. இவர்கள் வாங்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு சம்பளம் கிடைத்தாலும் வேலை செய்ய பலபேர் தயாரா இருக்காங்க. தயவு தாட்சண்யம் பார்க்காம இவர்களை வேலையை விட்டு தூக்கிடுங்க. இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கன்னு மனவருத்ததோட சொல்கிறேன். எல்லாத்தையும் ஒத்துக்கிட்டுதான் வேலைக்கு சேர்ந்தீங்க. கிடைத்த வேலையையும் ஒழுங்கா செய்வதில்லை. லஞ்சம் ஊழல் செய்து கேவலபிழைப்பு பிழைக்கறீங்க. இது கொஞ்சம்கூட நியாயம் இல்லை.


Nallavan
மார் 20, 2025 12:47

அரசு சம்பளத்தை வாங்கிக்கொண்டு அரசுக்கு எதிராக கோசம் போட்டால் உனக்கு சம்பளம் போட்டுக்க வேண்டுமா? அதற்க்கு ஆமுக கட்சி ஆரம்பிக்க வேண்டும், அப்ப உங்களுக்கு ஒட்டு போடுவார்கள், அவர்களுக்கு நீங்கள் வேலை கொடுக்கலாம், சம்பளம் கொடுக்கலாம்


Makkal virumbi
மார் 20, 2025 12:37

பொது மக்களின் மனுக்களின் மீது அரசு ஊழியர்கள் எவ்வித எதிர்பார்ப்பு இல்லாமலும் அலைக்கழிக்காலும் சேவை செய்வதில்லை. எனவே அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவு அளிக்க மாட்டார்கள். தற்போது வலுவான எதிர்கட்சிகள் ஏதும் இல்லை. ஆட்சி மாற்றத்திற்கு வாய்ப்பில்லை .


Shankar
மார் 20, 2025 11:57

புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு சம்மதித்து தான் வேலையில் சேர்ந்தீர்கள். இப்போ என்ன பழைய ஓய்வூதியம் வேண்டும்? இது முறைதானா?


பெரிய ராசு
மார் 20, 2025 10:25

ஜக்டோ ஜியோ ஆசிரிய அரசு அதிகாரிகள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஓங்கோல் திருட்டு திராவிட அரசுக்கு எதிராக ஓட்டளிக்க வேண்டும்


Oru Indiyan
மார் 20, 2025 09:32

இதை நபர் தான்.. சம்பளம் அரசு ஊழியர்களின் உரிமை என் சில வருடங்களுக்கு முன்பு சொன்னார். வயது ஆக ஆக .. மறதி வியாதி போல.


Karuthu kirukkan
மார் 20, 2025 09:03

உலக கொடுங்கோன்மை ஆட்சி -despotism, தமிழ்நாடு rule is tyranny in the world today


VENKATASUBRAMANIAN
மார் 20, 2025 08:54

நல்ல முடிவு இதேபோல் பாராளுமன்றம் சட்டசபை வெளியே போராடும் எம்பி எம்எல்ஏ க்களுக்கும் சம்பளம் கொடுக்க கூடாது. செய்வார்களா. இந்த நாட்டிலே குற்றவாளியே அமைச்சராகளாம். ஜாமினில் இருப்பவர் அமைச்சர் ஆகலாம். ஆனால் அரசு அலுவலர்கள் மீது வழக்கு இருந்தால் சஸ்பெண்டு. இதுதான் சனநாயகம்.


raja
மார் 20, 2025 08:31

திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற திராவிடன் விடியலை நம்பி வீணா போணவனுவோ இந்த ஜக்டோ ஜியோ ஆசிரிய அரசு அதிகாரிகள்...


சமீபத்திய செய்தி