உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குடிநீர் ஆதாரங்களில் தண்ணீர் இல்லை; மழையை நம்பி இருக்கிறது சென்னை!

குடிநீர் ஆதாரங்களில் தண்ணீர் இல்லை; மழையை நம்பி இருக்கிறது சென்னை!

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களில், பாதி கூட தண்ணீர் நிரம்ப வில்லை என்கின்றனர் அதிகாரிகள்.சென்னைக்கு குடிநீர் வழங்க முக்கிய நீர் ஆதாரமான பூண்டி நீர்த்தேக்கம், கொற்றலை ஆற்றின் நடுவில் அமைக்கப் பட்டுள்ளது. இதன் மொத்த கொள்ளளவு, 3,231 மில்லியன் கன அடி; பரப்பளவு, 121 ச.கி.மீட்டர். மழை மற்றும் கிருஷ்ணா நீர் வரத்தால், நீர்த்தேக்கம் நிரம்பினால், பேபி கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் என, இரண்டு கால்வாய்கள் மூலம், சோழவரம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.தற்போது தண்ணீர் இருப்பு 45 சதவீதமாக உள்ளது. பூண்டி, ரெட்ஹில்ஸ், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய்கண்டிகை, வீராணம் ஆகிய நீர்த்தேக்கங்களில் மொத்தம் 6 ஆயிரம் மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவை விட, பாதி அளவுக்கும் குறைவானது.கிருஷ்ணா நீர் பூண்டிக்கு வினாடிக்கு 100 கனஅடி (கனஅடி) வந்து கொண்டிருக்கிறது. கனமழையால் ஆந்திரா மற்றும் திருத்தணியில் உள்ள குளங்கள் நிரம்பினால், பூண்டிக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்கின்றனர் அதிகாரிகள்.நீர்தேக்கம்- மொத்த கொள்ளளவு (மி.க.அடி) - கொள்திறனுக்கான சதவீதம் பூண்டி- 468/ 3,231- 14.5 % (நீர் இருப்பு)செங்குன்றம்- 2378/ 3,300- 72.1% (நீர் இருப்பு)சோழவரம்- 102/1081- 9.4% (நீர் இருப்பு)செம்பரம்பாக்கம்- 1790/3645- 49.1% (நீர் இருப்பு)தேர்வோய் கண்டிகை- 304/500- 60.8% (நீர் இருப்பு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Bhaskaran
நவ 13, 2024 19:03

தண்ணீர் லாரி டேங்கர் நல்லாசி பெற்ற மந்திரிகள் அதிகாரிகள் உள்ளவரை நீர்த்தேக்கம் நிரம்புவது கேள்வி குறி


சுலைமான்
நவ 13, 2024 13:59

மழ பேஞ்சிட்டாலும் அப்டியே பில்டர் பண்ணி சேத்து வச்சி கிழிச்சிருவானுங்க.........


Barakat Ali
நவ 13, 2024 12:43

சிரிப்பாய்ச் சிரிக்கும் ஆட்சிக்கு முட்டுக்கொடுப்பவர்கள் இந்த செய்திப் பக்கமே வரமாட்டார்கள் ..... சென்னையில் மழை பெய்தாலும் கேடு ..... பெய்யாவிட்டாலும் கேடு ...... சுமார் அறுபதாண்டுகள் தமிழகம் திராவிடக்கட்சிகளின் பிடியில் இருக்கும் அவலம் ......


sridhar
நவ 13, 2024 11:09

டிசம்பர் 23 மழையெல்லாம் அப்படியே கடலில் , வாழ்க திராவிட மாடலும் அதற்கு வாக்களித்தவர்களும்.


MARI KUMAR
நவ 13, 2024 09:40

குடிநீர் தேவைக்கு மழை அவசியம்


முக்கிய வீடியோ