வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த செய்தியே அவர்களின் செல்வாக்கை தர வரிசைப் படுத்திதான் உள்ளது எஸ்.ஆர்.எம்.யு., டி.ஆர்.இ.யு., எஸ்.ஆர்.இ.எஸ்., மூன்றுதான் தட்சன் ரயில்வே கார்மிக் சங் பற்றி கேள்விப் பட்டதா இல்லை
இது வேண்டும் அது வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கும் ரயில்வே தொழிற்சங்கங்கள் ஊழியர்கள் எவ்விதம் ரயில்வே முன்னேற்றம் அடைய பணியில் உற்பத்தி திறன் அதிகப்படுத்த, நவீன உத்திகளைக்கொண்டு இன்னும் ரயில்வே உலகத்திறன் வாய்ந்ததாக செய்வார்கள் என்றெல்லாம் கூட சொல்லலாமே அப்பொழுதுதான் மக்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை வரும். தவிர நேரடியாக மக்களிடம் தொடர்புடைய ஊழியர்கள் அடாவடியாக நடந்துகொள்கிறார்கள் என்பதையும் தொழிலாளர்களிடம் வலியுறுத்தி அவர்களை மக்களிடம் மரியாதையுடனும் பணிவுடனும் நடந்துகொள்ள அறிவுறுத்துவோம் என்று எப்பொழுதாவது சொல்கிறீர்களா ? நன்முறையில் ஒளிருடன் கட்டப்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களின் சுவர்களில் உங்கள் சங்க சுவரொட்டிகள் தான் காணப்படுகின்றன. இது சரியா? ரயில்வே ஸ்டேஷன்கள் தொழிற்சங்கங்களின் சொத்தா? அவை மக்கள் சொத்து. வேறு எந்த பணியிடங்களிலும் இல்லாத அளவுக்கு உங்களுக்கு பென்ஷன் தவிர ஆயுட்காலம் வரை இலவச ரயில்வே பாஸ், இறந்த பின்பும் துணைவருக்கு தொடரும். இன்னும் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? மாற்றிக்கொள்ளுங்கள் உங்களை முதலில்.
எஸ்ஆர்எம்யு வை சேர்ந்த இந்த கன்னையா எப்போதே ஓய்வு பெற்றாரே? இன்னமும் இவர்தான் பொது செயலாளரா? இவர், இவரைப்போல கம்யூனிஸ்ட் கட்சியில் சிலர் எங்கு எந்த தொழிற்சாலையில் சங்கம் அமைத்தாலும் உள்ளே வந்து உட்கார்ந்து கொண்டு ஆர்ப்பாட்டம் ஆரம்பிப்பார்கள். ஒரு தொழிற்சாலை வளர்கிறதா, நஷ்டத்தை நோக்கிப் போகிறதா, அப்படி நஷ்டத்தை நோக்கிப் போனால் தொழிலாளர்கள் உதவியுடன் அதை சரி செய்ய முயல்வோம் என்றெல்லாம் முன் வர மாட்டார்கள். மாறாக நிர்வாகத்தால் முடியுமோ முடியாதோ, தொழிலாளர்களை முன்னிறுத்தி வானளாவிய கோரிக்கைகளை வைத்து கதவை இழுத்து மூட வைத்து விடுவார்கள். இவர்களால் வளர்ந்த தொழிற்சாலைகளை விட மூடப்பட்ட தொழில்களே அதிகம். ஜப்பான் போன்ற சில வெளி நாடுகளில் வேலை நிறுத்தம் என்றால் அதிக நேரம் வேலை செய்து அதிக உற்பத்தி செய்து நிர்வாகத்தை தத்தளிக்க வைப்பார்கள். அரசு இனி இவர்களைப் போல ஓய்வு பெற்றவர்களும், தொழிற்சாலைகளில் பணியில் இல்லாதவர்களும் அந்த தொழிற்சங்கத்தில் எவ்வித பொறுப்பிலும் வரக்கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டும். அரசியல் கட்ட பஞ்சாயத்தின் இன்னொரு ரகம் இவர்கள்.
கன்னையா பார்சல் போர்ட்டர் ஆக ருந்து வேலையை ராஜினாமா செய்தவர் ....பணியில் உள்ள ஊழியர் தவிர்த்து வேறு யாரும் -ஒய்வு பெற்றவர்கள் கூட - சங்க தலைவர் , ஆபீஸ் பேரர்கள் ஆக முடியாது என்பது சட்ட விதி ..ஆனால் கன்னையா எந்த அடிப்படையில் தொடர்கிறார் என்பது யாருக்கும் தெரியாது .....கூலி படைகளை வைத்டுகொண்டு செய்யும் அட்டூழியம் நிறைய ....கேள்வி கேட்க யாரும் இல்லை