வடகிழக்கு பருவ மழை: தமிழகத்தில் 34 பேர் பலி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
சென்னை; தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழைக்கு, கடந்த அக்., 1 முதல் நேற்று முன்தினம் வரை, 34 பேர் இறந்துள்ளனர்.தமிழகம் முழுதும், கடந்த மாதம் மழைக்கு, ஒன்பது பெண்கள், இரண்டுகுழந்தைகள், 15 ஆண்கள் என, மொத்தம் 26 பேர் இறந்துள்ளனர். இவர்களில், 11 பேர் மின்னல் தாக்கி, ஐந்து பேர் மின்சாரம் தாக்கி, நான்கு பேர் வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளனர். கால்நடைகள் 303 இறந்துள்ளன. மழையில் 864 குடிசைகள் பகுதி, 96குடிசைகள் முழுமையாக சேதமைடந்துள்ளன. மழை நீரில் 89,000 ஏக்கர் வேளாண் பயிர்கள் மூழ்கின. இதில், 5,856.37 ஏக்கர் பயிர்கள் முழுமையாக சேதமடைந்தன. இம்மாதம் மழைக்கு மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் இறந்துள்ளனர். இவர்களில் ஆறு பேர் மின்னல் தாக்கி, சுவர் இடிந்து ஒருவர், மரம் விழுந்து ஒருவர் இறந்துள்ளனர். 79 கால் நடைகள் இறந்துள்ளன.