உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முடிவுக்கு வந்தது வடகிழக்குப் பருவ மழை; வானிலை மையம் அறிவிப்பு

முடிவுக்கு வந்தது வடகிழக்குப் பருவ மழை; வானிலை மையம் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி, கேரளா, கடலோர ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து இன்றுடன் (ஜன.,27) விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. ஜனவரி முதல் டிசம்பர் இறுதி வரையிலான காலகட்டத்தில், 117 செ.மீ., மழை பெய்தது. இது, 2023ம் ஆண்டைவிட, 15 சதவீதம் அதிகம். வடகிழக்கு பருவமழை காலத்தில், திருநெல்வேலி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், விழுப்புரம் மாவட்டங்களில், இயல்பைவிட மிக அதிகமாக, 59 சதவீதத்துக்கு மேல் மழை பதிவாகி இருந்தது. இந்த முறை தென் மாவட்டங்களில் அதிகமான மழை கொட்டி தீர்த்தது.ஆண்டுதோறும் அக்டோபர் 3வது வாரம் முதல் டிசம்பர் மாதம் இறுதி வரை வடகிழக்குப் பருவமழை காலம் ஆகும். ஆனால் நடப்பாண்டில் ஜனவரி மாதம் வரை வடகிழக்கு பருவமழை நீடித்து வந்தது. இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி கேரளா, கடலோர ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து இன்றுடன் விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 100 நாட்கள் மேலாக மழை பெய்த நிலையில், இயல்பை விட 33% அதிகமாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கல்யாணராமன்
ஜன 27, 2025 13:02

சும்மா கதை விடாதீர்கள். இன்றோ நாளையோ மழை பெய்தால் என்ன செய்வீர்கள்? அதற்கு ஒரு புது காரணம் சொல்வீர்கள் மேலெடுக்கு சுயற்சி, கீழடுக்கு சுயற்சி என்று சொல்வீர்கள்.


angbu ganesh
ஜன 27, 2025 11:05

thank u 2024-ம் வருடம் போல 2025-ம் ஆண்டும் நல்ல மழை கொடுக்க உங்கள வேண்டுகிறோம்


முக்கிய வீடியோ