உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கூட்டணிக்காக வரிசையில் நிற்கவில்லை: எச்.ராஜா

கூட்டணிக்காக வரிசையில் நிற்கவில்லை: எச்.ராஜா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: '' கூட்டணிக்காக யாரிடமும் விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கவில்லை,'' என பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.மதுரையில் நிருபர்களை சந்தித்த எச்.ராஜா கூறியதாவது: சமூக ஒழுக்கம் கெட்ட சமுதாயத்தை இந்த திராவிட மாடல் அரசு உருவாக்கி கொண்டு உள்ளது. இதுவே டாக்டர் மீதான தாக்குதலுக்கு காரணம். போலீசார் பாரபட்சமாக செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.தொடர்ந்து, கூட்டணிக்கு பா.ஜ.,வை அழைக்கவில்லை என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ராஜா அளித்த பதில்: அ.தி.மு.க., கூட்டணிக்கு நாங்கள் வரிசையில் நிற்கிறோமா? எதற்காக பழனிசாமி பேசுகிறார் என தெரியவில்லை. கூட்டணி குறித்து நான் எந்த கருத்தையும் கூற மாட்டேன். பா.ஜ., மேலிடம் எடுத்த முடிவை தான் செயல்படுத்துவோம். கூட்டணிக்காக யாரிடமும் நாங்கள் விண்ணப்பித்துவிட்டு காத்து இருக்கவில்லை. கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி நீடிக்கிறது. இனிமேல் எந்த கட்சி வர வேண்டும். யாருடன் கூட்டணி என்பதை பற்றி பா.ஜ., மேலிடம் தான் முடிவு செய்யும். இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Velan Iyengaar
நவ 15, 2024 08:00

கஸ்தூரிக்கு ஆதரவாகவும் இருக்கப்போவதில்லை என்றும் சேர்த்து சொல்லுங்க ....முன்ஜாமீன் மனு தள்ளுபடி பற்றி இங்க ஒரு செய்தியை காணோம் ??


Mettai* Tamil
நவ 15, 2024 10:06

கஸ்துரிக்கு மட்டும் அல்ல ...உங்களுக்கும் சேர்த்து ஆதரவாகதான் இருப்பார் ராஜா ....


Smba
நவ 15, 2024 06:25

ஒருவரை தவிர யாரும் ஏற்க தயாரஇல்ல இதுதான் உண்மை


Ms Mahadevan Mahadevan
நவ 15, 2024 06:20

பிஜேபி உடன் யாரும் கூட்டணி அமைத்து அதனை வளர்த்து விடாதீர்கள். வளர்த்த கிடா மார்பில் பாயும் நினைவில் வையுங்கள். பிஜேபி தமிழ் நாட்டுக்கு நல்லதல்ல. சமூக ஒற்றுமை முக்கியம்


கண்ணன்,மேலூர்
நவ 15, 2024 09:39

அப்படீன்னா மதச்சார்பற்ற சமூக ஒற்றுமை கொண்ட SDPI கட்சியுடன் கூட்டணி வச்சுக்கலாமா?


Mettai* Tamil
நவ 15, 2024 10:04

மகாதேவா, கண்டிப்பாக வளர்த்த கிடா மார்பில் தான் பாய வேண்டும் ..முதுகில் பாய்ந்தால் அது வளர்த்த கிடா அல்ல ...பிஜேபி உடன் எல்லோரும் கூட்டணி அமைத்து அதனை வளர்த்து, நீங்களும் வளருங்கள் ..சமூக ஒற்றுமை முக்கியம், நாட்டில் மதத்துக்கு ஒரு சட்டம் உள்ளது . மதசார்பற்ற அரசு அமைய பிஜேபி தமிழ் நாட்டுக்கு நல்லது .....


venugopal s
நவ 15, 2024 05:56

நீங்கள் எப்போதும் தனிக்காட்டு ராஜா தான் என்பது தான் ஊரறிந்த விஷயம் ஆயிற்றே!


Kasimani Baskaran
நவ 15, 2024 05:32

இவர் வேறு... தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து இருக்கலாம்.


அப்பாவி
நவ 15, 2024 03:42

சத்திரத்தில் சாப்பாடு போட்டாத்தானே வரிசையில் நிக்கணும்? யாரும் கூட்டணி வெச்சுக்கறதா இல்லை.


ஆராவமுதன்,சின்னசேலம்
நவ 15, 2024 07:24

பந்தி பறிமாறும் முன்னே...இலையை எடுப்பதற்கு முண்டியடிக்கும் அந்த பாஞ்சி லட்சம்தான நீ?


Mettai* Tamil
நவ 15, 2024 10:14

அதே நினைப்பாதான் இருப்பீங்க போல, சத்திரத்தில் சாப்பாடு, பிரியாணி ,குவார்ட்டர் .....


சிவா. தொதநாடு.
நவ 14, 2024 22:44

2025 ஜனவரி முதல் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். பொது மக்கள் 6 மாதம் வரை மாற்றலாம் என்று அறிவிக்க வேண்டும்.


Sundar R
நவ 14, 2024 22:02

அனைத்து கட்சித் தலைவர்களும் ஒன்றுகூடி திமுகவை தனியாக நிற்கும்படி செய்தால் "விடிஞ்சா தெரியும் மாப்பிள்ளை குருடு திமுக" என்பது மக்களுக்கு விளங்கும். திமுகவை தமிழகத்தை விட்டு வெளியே அனுப்பி வைப்பது அனைத்து கட்சிகள் கடமை.