உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர்கள் மீதான வழக்கில் எதுவும் நகர்வதில்லை: சென்னை ஐகோர்ட் வேதனை

அமைச்சர்கள் மீதான வழக்கில் எதுவும் நகர்வதில்லை: சென்னை ஐகோர்ட் வேதனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்கில் எதுவும் நகர்வதில்லை. மற்றவர்கள் மீதான வழக்கில் வந்தே பாரத் ரயில் போல வேகம் காட்டப்படுகிறது,'' என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை, கோவை மாநகராட்சிகளில், பல்வே று பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கியதில், 98.25 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கூறி தனியார் நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.ஆனால், குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தினால், அறப்போர் இயக்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், அமைச்சர்கள், எம்பிக்கள் மீதான வழக்கில் எதுவும் நகர்வதில்லை. மற்றவர் வழக்கில் வந்தே பாரத் ரயில் போல் வேகம் காட்டப்படுகிறது எனக்கூறியதுடன், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக மத்திய அரசின் அனுமதி பெற லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் கால அவகாசம் அளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
அக் 13, 2025 22:00

சாட்சிகள் அனைவரும் பல்டி அடிக்கும் அல்லது சாகும் வரை ஊழல் வழக்குகளை தொடரலாங்?.


ஆரூர் ரங்
அக் 13, 2025 21:58

துரைமுருகன் ஊழல் வழக்கை எந்த கோர்ட் விசாரிக்க வேண்டும் என்பதே 14 ஆண்டுகளுக்குப் பின்னும் முடிவாகவில்லை. அவர் இது சம்பந்தமா சுப்ரீம் கோர்ட் செல்வார்?.


G Mahalingam
அக் 13, 2025 21:04

வந்தே பாரத் ரயில் டில்லி போய் அங்கு தடை போட்டு விட்டார்கள். 3 திமூக அமைச்சர்கள் ஜாமீனில் இருக்கிறார்கள். அந்த அமைச்சர்கள் வயது 75+ .


KOVAIKARAN
அக் 13, 2025 19:37

உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்து ஒப்புக்கொள்ள முடியாதது. அரசியவாதிகளின்மீது லஞ்சக் குற்றச்சாட்டின்மேல் வழக்கு தொடர்ந்தால், நீதிமன்றங்கள் ஏதாவது சாதாரண காரணங்களுக்காக வாய்தா மேல் வாய்தா கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். வழக்கை அப்படியே ஆறப்போட்டுவிடுகிறார்கள். பின்னர் ஆட்சி மாறியதும், ஆளும்கட்சியினர் அந்த வழக்கை நீர்த்துப்போகச்செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அப்படியே வழக்கில் தண்டனை பெற்றாலும் உச்சநீதிமன்றம் சென்று வழக்கறிஞரும் அரசியல்வாதிகளின் புரோக்கருமான கபில்சிபில் போன்றவர்களை வைத்து வாதாடி வழக்கிலிருந்து விடுதலை ஆகிவிடுகிறார்கள். இப்படி இருக்கையில், அரசியல்வாதிகளின் மீதுள்ள வழக்குகள் எப்படி வந்தே பாரத் வேகத்தில் போகும்?


Anbuselvan
அக் 13, 2025 19:36

வருந்தி அல்லது வேதனை அடைந்து பயனில்லை. உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவருக்கே கால நிர்ணயம் செய்யும் இந்த காலத்தில் உயர்நீதி மன்றங்களும் அரசிற்கு கால நிர்ணயம் செய்து அதற்குள் முடியாவிடில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் பெருமக்களை ஜாமினில் வெளி வரமுடியாத கோர்ட் காவலில் எடுத்து விசாரணை நடத்தி முடிக்க உத்தரவு விடலாமே


ASIATIC RAMESH
அக் 13, 2025 19:07

அதற்கு முழு காரணமும் நமது வளைந்து கொடுக்கும் சட்டங்களே... காலத்திற்கேற்றபடி கண்டிப்பாக காலவரையுடன் திருத்தங்கள் செய்யவேண்டும். ஆனால் எந்த முயற்சி செய்தாலும் எதிர்க்கட்சிகளும் எந்தக்கட்சியாக இருந்தாலும் பிரிவினைவாத மற்றும் ஜாதி அரசியல் செய்பவர்களும் அதற்கு கண்டிப்பாக ஒத்துழைக்கமாட்டார்கள்... உச்சநீதிபதிகள்தான் இதற்கு முடிவுகட்டவேண்டும்.


rama adhavan
அக் 13, 2025 19:03

சட்டங்கள் மாற்றப்படவேண்டும். 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பதிலாக கிராமப்புற வேலைவாப்பு திட்டத்தில் பாதுகாப்புடன் உழைக்க சொல்லலாம். அரசியல்வாதிகளுக்கு டிரம்ப் வரி போய் 3 மடங்கு தண்டனை தரலாம். வழக்கை இழுத்து அடிக்கும் அனைவருக்குக்கும் கடும் தண்டனை தரலாம். முடியுமா?


ஜெகதீசன்
அக் 13, 2025 18:35

எதுவும் நகரவில்லை என சாமானியன் வருத்தப்படலாம் ஆனால் அதில் விரைந்து செயல்பட்டு தண்டனை வழங்க வேண்டிய நீதிமன்றமே இப்படி சொன்னால் எப்படி?


D.Ambujavalli
அக் 13, 2025 18:23

கேஸை இழுத்தடித்து, சாட்சிகளை, ஆவணங்கள் அழிக்கவோ, நல்ல விலை கொடுத்து வாங்கவோ கால தாமதம் ஆகத்தான் செய்யும் பிடிபட்ட பணம், ஆவணம், சாட்சிகளின் மதிப்புக்கேறபடி deal பேசுவது அவ்வளவு சுலபமா ?


duruvasar
அக் 13, 2025 18:18

இந்த விஷயத்தில் முதல் குற்றவாளி தமிழக மக்கள் தான். தேர்தலில் மாத்தி மாத்தி குத்துவதை வாழ்க்கை முறையாக வைத்துகொண்டிருக்கிறார்கள் . யோசிக்க மறந்த இனம் தமிழினம் .


புதிய வீடியோ