என்.டி.பி.எல்., மின்சார ஒதுக்கீடு குறைப்பு
சென்னை: என்.எல்.சி., எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தமிழக மின் வாரியத்துடன் இணைந்து, என்.டி.பி.எல்., என்ற பெயரில் துாத்துக்குடி மாவட்டத்தில் கூட்டு அனல்மின் நிலையம் அமைத்துஉள்ளது. அங்கு தலா, 500 மெகா வாட் திறனில், இரு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிலிருந்து தமிழகத்திற்கு தினமும், 416 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், என்.டி.பி.எல்., மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் ஆண்டு பராமரிப்புக்காக, நேற்று அதிகாலை முதல் ஒன்றரை மாதங்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுஉள்ளது. அதனால், அந்த மின் நிலையத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கியதில், 50 சதவீத மின்சாரம் மட்டுமே தற்போது வழங்கப்படுகிறது.