உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கேரவன் கேவலம்; மல்லு நடிகைகளை படம் பிடிக்கும் ரகசிய கேமராக்கள்; பகீர் தகவல் அம்பலம்!

கேரவன் கேவலம்; மல்லு நடிகைகளை படம் பிடிக்கும் ரகசிய கேமராக்கள்; பகீர் தகவல் அம்பலம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மலையாள பட ஷூட்டிங்கின் போது கேரவனில் ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடை மாற்றுவதை வீடியோவாக எடுத்து நடிகர்கள் செல்போனில் ரசிப்பதாக பிரபல நடிகை ராதிகா பகீர் குற்றம்சாட்டி உள்ளார்.

பற்ற வைத்த பாலியல் புகார்கள்

கேரள திரையுலகமே ஹேமா கமிட்டி அறிக்கையால் அரண்டு போயிருக்கிறது. பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பெரும்பாலானவர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை பெண் கலைஞர்கள் சுமத்தி உள்ளனர். மல்லுவுட் திரையுலகையே விழி பிதுங்க வைத்துள்ள இந்த விவகாரம் மாநில அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

வழக்குகள்

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று மோகன்லால், உள்ளிட்ட பிரபல நடிகர்கள் திரைப்பட சங்க பதவிகளில் இருந்து ராஜினாமா செய்தனர். நடிகர்கள் சித்திக், முகேஷ், ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜூ உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவாகி இருக்கிறது.

நடிகை பேட்டி

இந் நிலையில் பிரபல நடிகை ராதிகா சரத்குமார் கேரள திரையுலகில் பல ஆண்டுகளாக நடந்து வரும் ஒரு முக்கியமான விஷயத்தை தற்போது வெளிக்கொணர்ந்துள்ளார். கேரள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதை அவர் கூறி உள்ளார். நடிகை ராதிகா சரத்குமார் கூறி இருப்பதாவது:

கேரவன் கேமரா

கேரளாவில் படப்பிடிப்பின் போது வழங்கப்பட்டு உள்ள கேரவனில் ரகசியமாக கேமராக்களை பொருத்தி நடிகைகள் ஆடைகளின்றி காட்சி அளிக்கும் வீடியோக்களை பதிவு செய்கின்றனர். பின்னர் அந்த வீடியோக்களை அங்கே படப்பிடிப்பில் இருக்கும் நடிகர்கள் ஒன்றாக அமர்ந்து தங்களது செல்போனில் பார்த்து ரசித்துள்ளனர்.

ஓட்டல் அறை

இதுபோன்ற சம்பவங்களை பலமுறை நானே நேரில் கண்டுள்ளேன். அதனால் தான் பயந்து போய் ஓட்டலில் அறை எடுத்து, அங்கே சென்று நான் உடை மாற்றிக் கொண்டு படப்பிடிப்புத்தளத்துக்கு வருவேன். அதன் பின்னர், நானே பலமுறை எனக்கு தெரிந்த நடிகைகளிடம் கேரவன் உள்ளே போய்வரும் போது கவனமாக போகுமாறு கூறி இருக்கிறேன்.

எனக்கு தெரியும்

படப்பிடிப்பின் போது நிறைய நடிகைகளின் அறைக்கதவுகளை பலர் தட்டுவதை பார்த்து இருக்கிறேன். பல பெண்கள் இதுபோன்ற தொந்தரவுகளை தாங்காமல் எனது அறைக்கு வந்து உதவி செய்யுமாறு கேட்ட தருணங்களும் உண்டு. இன்று சில நடிகைகள் எங்களுக்கு எந்த சம்பவமும் இதுபோன்று நடக்கவில்லை என்கின்றனர். ஆனால் அதில் உண்மையில்லை. அவர்களுக்கு நடந்தது என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும் என்று கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

MADHAVAN
செப் 04, 2024 13:25

பாலியல் தொழிலைவிட கேவலம்


MADHAVAN
செப் 04, 2024 13:24

சினிமாவில இவளுங்க பண்ணும் அதிகலம் கொஞ்சநஞ்சமா


BalaG
செப் 01, 2024 03:46

Super. சரியான தைரியம். இந்த மாதிரி எல்லாரும் வெளிப்படையா பேசினால்தான் இந்த விஷயத்துக்கு ஒரு முடிவு வரும்


Mr Krish Tamilnadu
ஆக 31, 2024 20:24

கமெண்ட் எல்லாம் ஆணாதிக்க சிந்தனையின் தாக்கம் தெரிகிறது. சாக்கடை நற தான் செய்யும் என்பது போல. சுத்தம் செய்ய ஆசைப்படுகிறார்கள். உதவுங்கள். பாலியல் வன்கொடுமைக்கு மேற்கு வங்க தீர்ப்பு பேரிடியாக வர வேண்டும். அதே போல மலையாள சினி உலக தீர்ப்பு இந்தியா திரையுலக்கே சவுக்கடியாக வர வேண்டும். மற்ற திரையுலகம் திருந்தி விடும். ஒரு பெண்ணின் குரல் அவர்களுக்கு ஆதரவாக மற்ற பெண்களின் குரல்கள். நான் ஒதுங்கினேன். நான் சுதாரித்தேன். இன்று இந்த பெண்கள் வாய்விட்டு கூறுகிறார்கள். இனி வரும் தலைமுறைக்காவது விடிவு தாருங்கள் என்ற ரீதியில் தான் நமது சித்தியின் கருத்தை எடுத்து கொள்ள வேண்டும். இந்த பாலியல் குற்றவாளிகளுக்கு இனி கேமரா முன் வர ஆயுள் தடை விதிக்க வேண்டும். சினி உலகில் இருந்து தனிமை படுத்தப்பட வேண்டும்.


murthy c k
ஆக 31, 2024 17:47

பானுப்ரியா அல்ல,தையல்காரி வேஷத்தில் நடித்தது சீமா


sankaran
ஆக 31, 2024 17:13

அந்த காலத்திலியே மலையாள படம் அவ்லிண்டே ராவுகள் ரொம்ப பேமஸ்.. நடிகை பானுப்ரியா டீச்சர் ஆஹ நடித்த ஒரு படத்தில் டியூஷன் படிக்கும் பையனிடம் சல்லாபம்.. இப்படி பட்ட படங்களில் நடித்து காசு சம்பாரித்து , மக்கள் மனதையும் கெடுத்து விட்டு.. இப்போ வந்து sexual ஹராஸ்சமென்ட் பத்தி புகார் அளிப்பதில் நியாயம் இல்லை...


D.Ambujavalli
ஆக 31, 2024 16:50

மலையாளம் முதல் அடி எடுத்து விட்டது ஆந்திரா தலை தூக்க ஆரம்பிக்கிறது கோலிவுட் மட்டும் சாமியார் மடமா? இனி இங்கும் எத்தனை பெருந்தலைகள் ஆட்டம் அம்பலமாகுமோ ? ‘நேற்று அழைத்தும் , வலியவும் வந்து chance க்காக நின்றுவிட்டு ஆடி கழித்த ஆறாம் மாதம் - தப்பு - அறுபதாம் வருஷம் குப்பையைக் கிளறி என்ன சாதிக்கப்போகிறார்கள்


ராமகிருஷ்ணன்
ஆக 31, 2024 16:46

90 சதவீத நடிகைகளுக்கு குறைந்தது 3 கல்யாணம் தான். இதிலே இவர்களின், ஒழுக்கம், பத்தினி வேஷம் கிழிந்து விட்டது. இவர்கள் பேசுவது இவர்களுக்கே கூச்சமாக இருக்கும்.


theruvasagan
ஆக 31, 2024 16:09

எப்பவோ நடந்ததை இத்தனை வருஷம் கழித்து வெளியிட்டால் என்ன உபயோகம். மானமும் கவுரவமும் நஷ்டமானதை ஆறப்போட்டுவிட்டு சாவகாசமாக சொல்ல வேண்டிய அவசியம் என்ன. சினிமா துறை என்பதே தோல் வியாபாரம் என்பது தெரிந்த விஷயம்தானே. இப்போதெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காவா சினிமா துறைக்கு வருகிறார்கள். பணத்துக்கும் புகழுக்கும்தானே. அந்த போதையின் பக்கவிளைவுகள் எப்படி இருக்கும் என்று தெரியாமலா நுழைகிறார்கள்.


ராமகிருஷ்ணன்
ஆக 31, 2024 15:03

காமத்தை பரப்பி காசு பார்க்கும் திரைத்துறையில் தேவையான காசு சேர்ந்த பிறகு உத்தமி, பத்தினி வேஷம் எதுக்கு. பொது மக்களுக்கு இவர்களின் யோக்கியதை நன்கு தெரியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை