உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருப்பு பேட்ஜ் அணிந்து நர்ஸ்கள் போராட்டம்

கருப்பு பேட்ஜ் அணிந்து நர்ஸ்கள் போராட்டம்

சென்னை : உலக செவிலியர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலை யில், பணி நிரந்தரம் கோரி, மாநிலம் முழுதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர், கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, நர்ஸ்கள் கூறியதாவது:தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, தொகுப்பூதிய நர்ஸ்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து தொகுப்பூதிய ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி, ஜூன் 26ம் தேதி சென்னையில் தர்ணா போராட்டமும், ஜூலை 17ல் தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., வளாகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டமும் நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை