உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கருப்பு பேட்ஜ் அணிந்து செவிலியர்கள் போராட்டம்

 கருப்பு பேட்ஜ் அணிந்து செவிலியர்கள் போராட்டம்

சென்னை: மாற்று பணியிட மாறுத லுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு செவிலியர்கள், கருப்பு 'பேட்ஜ்' அணிந்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள ஏழு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் பணியாற்றும், 210 செவிலியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், சேலம், திருச்சி, செங்கல்பட்டு மற்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கு, மாற்று பணி அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டனர். இந்த மருத்துவமனைகளில், புதிய பணியிடங்களை உருவாக்காமல், ஒரு மருத்துவமனையில் இருக்கும் பணியிடத்தை குறைத்து, மற்றொரு மருத்துவமனைக்கு பணியிட மாறுதல் வழங்குவது ஏற்புடையதல்ல என, செவிலியர்கள் குற்றம்சாட்டினர். அரசின் இந்நடவடிக்கையை கண்டித்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தினர், கருப்பு பேட்ஜ் அணிந்து, நேற்று பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை