உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்; போட்டோ ஆல்பம்!

ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்; போட்டோ ஆல்பம்!

சென்னை: ஆடி அமாவாசையை முன்னிட்டு, இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருநெல்வேலி தாமிரபரணி ஆறு, கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.ஆடி அமாவாசை நாளில் புனித நீராடி, முன்னோர்களுக்கு எள் மற்றும் அரிசி மாவால் செய்யப்பட்ட பிண்டங்களை வைத்து தர்ப்பணம் கொடுப்பது, அவர்களின் ஆசிகளைப் பெற்று குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vxd64zw8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் குடும்பத்துடன் தாமிரபரணி ஆற்றின் கரையில் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.வாழை இலைகளில் எள், அரிசி மாவுப் பிண்டம், வாழைப்பழம், வெற்றிலை, ஊதுபத்தி போன்றவற்றை வைத்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர். திருநெல்வேலியில் முக்கிய பகுதியான குறுக்குத்துறை முருகன் கோவில், வண்ணாரப்பேட்டை பேராச்சி அம்மன் கோவில், கொக்கிரகுளம், சீவலப்பேரி ஆறு, அருகன் குளம் தாமிரபரணி ஆறு உட்பட அனைத்து இடங்களிலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பெரும்பாலான பொதுமக்கள் குவிந்தனர்.ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கன்னியாகுமரியில் உள்ள முக்கடல் சங்கமத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.திருவண்ணாமலை அய்யங்குளம் குளக்கரையில் ஏராளமான பக்தர்கள் தனது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நந்தவனத்தில், ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பூம்புகாரில் காவிரி கடலுடன் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ஆயிரக்கணக்கானோர் கூடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

J.Isaac
ஜூலை 25, 2025 13:56

இருக்கும் போது பெரும்பாலோர் பெற்றோரை கவனிப்பதில்லை.இறந்த பிறகு சம்பிரதாயங்கள்


theruvasagan
ஜூலை 24, 2025 16:04

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் பிரதி அமாவாசை தினத்தில் ஆயிரக்கணக்கானோர் முதல்நாள் இரவே வந்திறங்கி தங்களது இறந்த முனனோர்களுக்கு தர்ப்பணம் செய்துவிட்டு போவது மிகவும் பிரசித்தம்.


என்னத்த சொல்ல
ஜூலை 24, 2025 12:27

இந்திய முன்னேறமுடியாமல் தவிர்ப்பததற்கு இந்த மாதிரி அர்த்தமற்ற சடங்குகள் தான். உணவு பொருளை, தண்ணீரில் கலக்கி விடுவதும், கட்டிய துணியை அவிழ்த்து விடுவதும், எப்படி மூதாதையர்களூக்கு போய் சேரும் எனத்தெரியவில்லை. அதற்க்கு பதிலாக அவற்றை ஏழைகளுக்கு கொடுக்கலாம். இதைச்சொன்ன நம்மள முட்டாளும்பாய்ங்க...


Hindu
ஜூலை 24, 2025 14:08

இந்த கருத்து அபத்தமானது. எல்லா மதங்களிலும் இம்மாதிரி நம்பிக்கைகள் உண்டு. மேல் நாடுகளிலும் உண்டு. நாத்திகம் பேசும் அரசியல்வாதிகள் வீட்டிலேயே இதெல்லாம் செய்கிறார்கள். போவியா


Venkatesan
ஜூலை 24, 2025 14:14

முன்னேறிய நாடு என்று எதை சொல்லுகிறீர்கள்? அறிவியலில் பாரத நாடு எந்த நாட்டுக்கும் சளைத்தது இல்லை. கலாச்சாரத்தில் நாம் மற்றவர்களுக்கு முன்னோடி. உங்களை போன்றவர்கள் எதையும் ஒழுங்காக படிக்காமல் எதையும் சரியாக புரிந்து கொள்ளாமல் சொந்த பேரை கூட சொல்ல முடியாமல் இருப்பதே நம் நாட்டுக்கு கேடு.


ஈசன்
ஜூலை 24, 2025 15:31

ஆஹா, வந்துட்டாரு தத்துவம் பேச. யதார்த்துக்கு அப்பாற்பட்டது ஆன்மீகம். உணவை நீரில் கரைத்து இறந்தவர்களுக்கு சமர்ப்பிக்கபடுபவை, அவர்கள் வேறு பிறவி எடுத்திருந்தால் அவர்களுக்கு உணவாக வேறு ரூபத்தில் வேறு யார் மூலமாகாவோ சென்று சேரும். இல்லையென்றால் இறந்த போன நம் முன்னோர்கள் ஆத்ம ரூபத்தில் வாழ்கிறார்கள் என்று நம்பினால் மட்டுமே, மற்ற விஷயங்கள் புரியும். இல்லையென்றால் என்னத்த சொன்னாலும் உனக்கு புரியாது.


theruvasagan
ஜூலை 24, 2025 16:13

ஏம்பா. பகுத்தறிவு கொழுந்தே. பகுத்தறிவு பேசின தலைவன்கள் இறந்து போனால் அவர்கள் சடலத்துக்கு தொண்டர்கள் ஆயிரக்கணக்கான மலர் மாலைகளை வைக்கிறார்களே. அதை இறந்து போனவர் முகர்ந்து பார்த்து சந்தோஷப்படுவதற்காகவா. அவையெல்லாம் வீணாகத்தானே போகிறது. இந்து மதச் சடங்கு என்றால் மட்டும் நொட்டை சொல்ல வரிந்து கட்டிக்கொண்டு வந்துடுவீங்களே.


திகழ்ஓவியன்
ஜூலை 24, 2025 12:09

சரி பிஜேபி வருவதற்கு முன்னர் யார் இந்துக்களை பாதுகாத்து வந்தது, உங்களது கலவர யுக்தி எங்களது மனித நேய பக்தி


Venkatesan
ஜூலை 24, 2025 14:19

பலரும் உள்ளார்கள். பிரிவினை சக்திகள் ஒரு புள்ளியில் ஒன்றிணைவது போல் ஆன்மீக சக்திகள் பாஜாவில் ஒன்றிணைவதில் என்ன தவறு? கேள்வி கேக்கும் முன் அது கேனத்தனமான கேள்வியா இல்லை திருப்பி அடிக்கும் கேள்வியை என்று யோசித்து கேட்கவும். முகலாய மூர்கள் தெற்கில் ரொம்ப கோலோச்சுவதற்கு தடையாக இருந்தவர் கிருஷ்ணா தேவா ராயர். வரலாற்றை சரியாக படிக்கவும்.


naranam
ஜூலை 24, 2025 11:48

பெரியாராவது மண்ணாவது!


S Balakrishnan
ஜூலை 24, 2025 11:11

சென்னை கபாலீஸ்வரர் கோயில் குளத்தறுகில் தர்ப்பணம் கொடுப்பதைப் பற்றி ஒரு வரியாவது குறிப்பிட்டிருக்கலாம்.


Arul. K
ஜூலை 24, 2025 11:01

வேதாரணியம் மற்றும் கோடியக்கரை பகுதிகளில் தினமலர் நிருபர்களே இல்லையா?


sridhar
ஜூலை 24, 2025 10:44

Sincere ஆக செய்பவர்கள் திமுகவுக்கு வோட்டு போடாதீர்கள், அப்போது தான் இதுக்கு முழு பலன் இருக்கும்.


sundarsvpr
ஜூலை 24, 2025 09:33

ஆற்றில் தர்ப்பணம் செய்வோர் லட்ச்சக்கணக்கில் கோடிக்கணக்கான ஹிந்து மக்கள் தங்கள் இல்லங்களில் புரோகிதர் வைத்து தர்ப்பணம் செய்கின்றனர். இதனையும் செய்தியில் கூறினால் செய்தி முழுமையாய் இருக்கும். தர்ப்பணம் செய்த நாள் இரவு போது இட்லி தோசை உப்புமா போன்ற பலகாரங்கள் மட்டும் எடுத்துக்கொள்வர்


எஸ் எஸ்
ஜூலை 24, 2025 14:03

ஒரு திருத்தம். புழுங்கல் அரிசியில் செய்த இட்லி தோசை சாப்பிட மாட்டார்கள். கோதுமை, பச்சரிசியில் செய்த உணவுகள் சாப்பிடலாம்


SENTHIL NATHAN
ஜூலை 24, 2025 09:27

இது ஆன்மீக மண் தான் வைதீக இந்து சனாதன தர்மம் தான் இந்த நாட்டை நல்லவிதமாக ஒருங்கிணைப்பு செய்து வைத்துள்ளது


J.Isaac
ஜூலை 25, 2025 13:48

ஆனால் இன்னும் ரயிலில் கழிவறைகளில் சங்கிலி கட்டிதான் கப் உள்ளது.


சமீபத்திய செய்தி