மேலும் செய்திகள்
திமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் விலகல்
53 minutes ago | 2
சென்னை: ஒன்பது லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, மத்திய அரசு அதிகாரிகள் இருவருக்கு, சி.பி.ஐ., அதிகாரிகள், 'சம்மன்' அனுப்பி உள்ளனர். மத்திய பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளராக பணிபுரிபவர் பாபு ராவ், 48. சென்னை கே.கே.நகரில், மத்திய பொதுப்பணித் துறை, மண்டல பயிற்சி மையத்தில், உதவிப் பொறியாளராக பணிபுரிபவர் மஞ்சுநாதன், 50. இவர்கள், 2023ல், வருமான வரித்துறையில் பணிபுரிந்தபோது, சொத்து மதிப்பீடை குறைத்து காண்பிக்க, தொழில் அதிபர் ஒருவரிடம், ஒன்பது லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி உள்ளனர். இது தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 'இவ்வழக்கில் வரும் ஏழு நாட்களுக்குள், இருவரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்' என, சி.பி.ஐ., அதிகாரிகள் 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
53 minutes ago | 2