உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கடத்தப்பட்ட முதியவர் நிலை என்ன? : கோர்ட்டில் ஒருவர் சரண்

கடத்தப்பட்ட முதியவர் நிலை என்ன? : கோர்ட்டில் ஒருவர் சரண்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே முதியவரை கடத்திய கார், கரூரில் கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தப்பட்டவர் நிலை கேள்விக்குறியாக உள்ளது. தேனி தேவதானப்பட்டியை சேர்ந்த மீராமைதீனுக்கு, 62, சொந்தமான தோட்டம், பன்றிமலை அடிவாரத்தில் உள்ளது. இதற்கு பாதை கேட்டதால், மீரா மைதீனுக்கும், சிலருக்கும் பிரச்னை ஏற்பட்டது. கடந்த 3 ம் தேதி, காரில் வந்த கும்பல், அவரை கடத்தி சென்றது. நிலத்தகராறில் அன்புமணி, சரவணன், ஜீவானந்தம், பாலமுருகன், ஈஸ்வரி, கருப்பையா, ஜோதிமுருகன், ஞானசேகர், ராஜூ, வனசேகர் ஆகியோர் கடத்தி சென்றதாக, மகன் புகார் கொடுத்தார். வனசேகர் மகன் ராஜசேகரை, கன்னிவாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம், கரூர் கோர்ட்டில், ராஜசேகரின் மாமா செந்தில் சரணடைந்தார். கடத்தலுக்கு பயன்பட்ட சுமோ கார் (டி.என்.39.எச்.1121), கரூரில் கைப்பற்றப்பட்டது. ஆனால் மீராமைதீன் நிலை தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் கூறியது: வனசேகர் தோட்டத்தை கடந்து தான் மற்ற தோட்டங்களுக்கு செல்ல வேண்டும். அவரிடம் பாதை கேட்டு மீராமைதீன் போராடியுள்ளார். கடத்தல் கும்பலை நெருங்கி விட்டோம், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை