மேலும் செய்திகள்
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பு
6 minutes ago
தென் மாவட்டங்களில் இன்று மிதமான மழை
10 minutes ago
17 ஊராட்சிகள் 37 ஆக பிரிப்பு
2 hour(s) ago
ஜனவரி 5, 1902விருதுநகர் மாவட்டம், பி.ராமச்சந்திரபுரம் கிராமத்தில், விவசாய குடும்பத்தில், 1902ல், இதே நாளில் பிறந்தவர் ரா.கிருஷ்ணசாமி நாயுடு. நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். தன்னார்வத்தால், தமிழறிஞர்களிடம் இலக்கண, இலக்கியங்களை படித்து புலவர் ஆனார். ஆன்மிகத்தில் நாட்டமும், இசையில் ஞானமும் கொண்டவர்.காங்கிரசில், 20வது வயதில் இணைந்து, சட்ட மறுப்பு, தனிநபர் சத்தியாகிரகம் உள்ளிட்ட சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றார். காங்கிரசில் பல பொறுப்புகளை வகித்தவர், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக உயர்ந்தார். முன்னாள் முதல்வர் காமராஜரின் நண்பரான இவர், சுதந்திரத்துக்கு பின், மூன்று முறை எம்.எல்.ஏ., ஆனார்.காந்திய வழியில், சொந்த வாகனம் கூட வாங்காமல் எளிமையாக வாழ்ந்தார். வினோபா பாவேயின் பூமி தான கொள்கையை ஏற்று, தன் நிலங்களை ஏழைகளுக்கு தானமளித்த இவர், 71வது வயதில், 1973, அக்டோபர், 30ல் மறைந்தார்.ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவில் கோபுரங்களை சீரமைத்த, விடுதலை வீரர் பிறந்த தினம் இன்று!
6 minutes ago
10 minutes ago
2 hour(s) ago