மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
4 hour(s) ago | 3
ஸ்டாலினை கருணாநிதியின் ஆன்மா மன்னிக்காது: பா.ஜ., செய்தி தொடர்பாளர்
4 hour(s) ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
7 hour(s) ago | 39
பிப்ரவரி 16, 2006 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணிக்கு அருகில் உள்ள, குருவிக்கரம்பை கிராமத்தில், 1942ல் பிறந்தவர் சண்முகம். முனைவர் பட்டத்துடன், தமிழ் இலக்கியம் படித்த இவர், சென்னை பச்சையப்பன் கல்லுாரியின் தமிழ் துறை தலைவராக பணியாற்றினார். மரபு கவிதைகள், புதுக்கவிதைகள் எழுதுவதில் வல்லவரான இவர், 'நினைவுச்சின்னம், பாட்டுப்பறவை, ஒரு குயிலின் குரல்' உள்ளிட்ட கவிதை நுால்களையும், சில ஆய்வு நுால்களையும் எழுதினார். கோவையில், இவர் பங்கேற்ற கவியரங்கத்திற்கு தலைமை வகித்த, திரைப்பட இயக்குனர் பாக்யராஜ், அந்த 7 நாட்கள் படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பை வழங்கினார். 'கவிதை அரங்கேறும் நேரம்' என்ற பாடலின் வாயிலாக, தமிழ் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானார். தொடர்ந்து, டார்லிங்... டார்லிங்... டார்லிங், தாவணிக்கனவுகள், கன்னி ராசி, ஆண் பாவம் உள்ளிட்ட படங்களில் பாடல்கள் எழுதியதுடன், பாண்டியராஜன் நடிப்பில், மாப்பிள்ளை மனசு பூ போல என்ற படத்தையும் தயாரித்தார். இவர், 2006ல் தன், 64வது வயதில், இதே நாளில் மறைந்தார். 'பாரதியார் விருது' பெற்ற பாடலாசிரியரின் நினைவு தினம் இன்று!
4 hour(s) ago | 3
4 hour(s) ago | 2
7 hour(s) ago | 39