உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பண்ருட்டி விஷ சாராய வழக்கு 23 ஆண்டுக்கு பின் ஒருவர் கைது

பண்ருட்டி விஷ சாராய வழக்கு 23 ஆண்டுக்கு பின் ஒருவர் கைது

பண்ருட்டி: பண்ருட்டி அருகே விஷ சாராயம் குடித்து 53 பேர் பலியான வழக்கில், 23 ஆண்டுக்கு பின் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நத்தம், மேலஅருங்குணம், ஒறையூர் உள்ளிட்ட கிராமங்களில, 2001ம் ஆண்டு நவ., 29ம் தேதி, விஷ சாராயம் குடித்து 53 பேர் பலியாகினர்.இச்சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரிகள் உட்பட 22 மீது புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கடலுார் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.வழக்கில் தொடர்புடைய 7 பேர் இறந்துவிட்டனர். வழக்கில் தலைமறைவு நபர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.அதையடுத்து, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் அசோகன், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் தனிப்படை போலீசார், இவ்வழக்கின் 9வது குற்றவாளியான திருப்பூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த தோஜா ஆனந்ந், 58; என்பவரை கடந்த வாரம் கைது செய்தனர்.இந்நிலையில், சம்பவத்தன்று சாராயம் விற்பனை செய்தவரான தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரை சேர்ந்த மாடசாமி,72; என்பவரை தஞ்சாவூரில் நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் 23 ஆண்டுகளுக்கு பிறகு, போலீசார் முக்கிய குற்றவாளியை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வாய்மையே வெல்லும்
நவ 15, 2024 07:35

உடனேயே கருவமீனு ஐயிரமீனு கெண்டிமீனு ஜாமீனு கொடுத்து அழகு பார்க்கவேண்டுமே ..இதுதான் இப்போ நடக்கப்போகிறது


சமீபத்திய செய்தி