உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாடு ஒரே தேர்தல்; நடைமுறைக்கு சாத்தியமற்றது: முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல்; நடைமுறைக்கு சாத்தியமற்றது: முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.பார்லிமென்டுக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும், 'ஒரே நாடு - ஒரே தேர்தல்' முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக சட்டத்தை விரைவில் கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,' ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. பா.ஜ.,வின் ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை பா.ஜ.,வால் நடை முறைக்கு கொண்டு வரமுடியாது.இந்தியாவின் வேறுபட்ட தேர்தல் நடைமுறை சிக்கல்களை கவனத்தில் கொள்ளவில்லைவேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு கட்சியின் ஆசைக்கு ஏற்ப இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது. திசை திருப்பும் நடவடிக்கையில் நேரத்தை செலவிடாமல் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 72 )

Yaro Oruvan
அக் 11, 2024 09:40

அதெல்லாம் அவுக பாத்துப்பாவ.. நம்ம லெவலுக்கு பவளவிழா, முப்பெரும் விழா, தமிழர் எழுச்சி விழா / உப்பிகள் எழுச்சி விழா அப்டீன்னு எதையாவது ஒளறிவிட்டு பொழப்ப ஓட்டுங்க.. நாடு / வளர்ச்சி இதெல்லாம் நமக்கெதுக்கு .. நமக்கு ருக்கவே இருக்கானுவ 200 ஓவா உப்பிஸ் .. நம்ம உப்பி அண்டா ஒருத்தன் இருக்கான் தல.. 200 ல்லாம் தேவையில்லை .. பழைய சோத்தை போட்டாலே பத்து நாளைக்கி கூவுவான்.


karthik
அக் 11, 2024 08:51

நாட்டிற்கு நல்லது எல்லாம் சாத்தியமற்றது என்று தான் உங்க கூட்டம் சொல்லும் ...அப்படிப்பட்டவர்கள் தானே ஒரு அணியாக சேர்ந்து தானே மக்கள் முன்பு நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறீர்கள் பணக்கார குடும்பங்களாக மாறிக்கொண்டிருக்கிறீர்கள்.


tamilvanan
செப் 25, 2024 23:00

தேர்தல் கமிஷன் அல்லவா சாத்தியகூறுகளை ஆராய வேண்டும். ஸ்டாளின் எதிர்ப்பு ஏன் ?


Ramesh Sargam
செப் 25, 2024 13:17

ஸ்டாலின் அப்பா கருணாநிதி இந்த ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அன்று ஆதரவு தெரிவித்தார். ஆனால் இன்று இவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். ஸ்டாலின் எதிர்ப்பு மோடிஜியின் பாஜகவிற்கா அல்லது ஸ்டாலினுடைய அப்பா கருணாநிதிக்கா...?


panneer selvam
செப் 21, 2024 23:56

Stalin ji , In 1971 , your father Kalaingar combined the state election of Tamilnadu even thought state assembly had one more year to stay with central election . Kalaingar won the both state and central elections handsomely . Are you aware of this ?


Velusamy
செப் 21, 2024 17:36

ஒரே குடும்ப ஆட்சி மட்டுமே சாத்திய படும்


xyzabc
செப் 20, 2024 11:37

தி மு க விடம் பண பலம், அதிகார பலம், அடிக்கிற பலம் நிறைய உள்ளது. தொண்டர்கள் உழைக்க ரெடி. எப்பொழுது தேர்தல் வைத்தாலும் தி மு க வெல்வது கடினம் இல்லை. பிரியாணி, டாஸ்மாக் கை வந்த கலை . நாடாளு மன்ற தேர்தலில் பண பலத்தை நிரூபித்தார்கள்.


பேசும் தமிழன்
செப் 20, 2024 08:07

திமுக ஒரு திட்டத்தை ஆதரிக்கவில்லை.... எதிர்க்கிறது என்றால்... அது கண்டிப்பாக நாட்டுக்கு நன்மை தரும் விஷயமாக தான் இருக்கும்.... நாட்டுக்கு நல்லது என்றால்.... இவர்களுக்கு ஆகாது.


Saai Sundharamurthy AVK
செப் 19, 2024 21:09

ராம்நாத் கோவிந்த் கமிட்டி அறிக்கையில் மத்திய அரசின் முடிவு தான் இறுதியானது. மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் இருக்கும் மாநில அரசுகளின் கருத்தை கேட்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருக்கிறது. ஆகவே, மாநில அரசுகள் எவ்வளவு புலம்பினாலும், "ஒரேநாடு ஒரே தேர்தல் நடைமுறை" அமலுக்கு வந்தே தீரும்.


சாண்டில்யன்
செப் 19, 2024 20:44

இதை சொல்வது நடைமுறைப்படுத்தவா? இல்லவே இல்லை பலரையும் மிரட்டவே? பாமரன் முதல் அரசியல்வாதி வரை தினம் தினம் பயந்து பயந்துசாக வேண்டும்ங்கிற சாடிஸ்டுக்கள்


முக்கிய வீடியோ