உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரே நாடு, ஒரே தேர்தலால் எந்த கட்சிக்கும் ஆபத்து இல்லை: அண்ணாமலை

ஒரே நாடு, ஒரே தேர்தலால் எந்த கட்சிக்கும் ஆபத்து இல்லை: அண்ணாமலை

சென்னை: ''ஒரே நாடு, ஒரே தேர்தலை பா.ஜ., கொண்டு வரவில்லை; ஏற்கனவே இருந்த ஒரே நாடு, ஒரே தேர்தலைதான் பா.ஜ., திரும்ப கொண்டு வருகிறது; பா.ஜ.,வின் வளர்ச்சி எத்தனை மனிதர்களுக்கு பிரச்னை ஏற்படுத்தியுள்ளது என்பதை, பழனிசாமியின் பேச்சு காட்டுகிறது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.சென்னையில் அவர் அளித்த பேட்டி: பார்லிமென்டில், 'ஒரே நாடு; ஒரே தேர்தல், தொடர்பாக, இரு மசோதாக்களை, பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். இதை, பா.ஜ., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த 1952ல் நடந்த முதல் பொது தேர்தலில், 494 எம்.பி.,க்கள் இருந்தனர். கடந்த, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நடந்த தேர்தலில், 543 எம்.பி.,க்கள் இருந்தனர். இதுதான் இன்று வரை உள்ளது. இதை நிர்ணயம் செய்து, 2021ல் நீட்டிக்கப்பட்ட காலக்கெடு, 2026ல் முடிவடைகிறது.

குறிவைக்கவில்லை

பா.ஜ., கொண்டு வந்துள்ள மசோதாவின்படி, 2029க்கு பின் நடக்கும் லோக்சபா தேர்தலோடு, அனைத்து மாநிலங்களுக்கும், சட்டசபை தேர்தல் நடக்கும். தமிழக சட்டசபை தேர்தல், 2026ல் நடக்கும். அதில் வெற்றி பெறும் கட்சி, 2031 வரை ஆட்சியில் இருக்க வேண்டும்.தமிழகத்தில், 2034ல் ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்கும். இந்தியாவில் நடந்த முதல் நான்கு பொது தேர்தல்கள், ஒரே நாடு ஒரே தேர்தல் தான். அதற்கு பின் குழப்பம் ஏற்பட்டது. இதற்கு அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, 1967, 1969ல் மாநில ஆட்சிகளை கவிழ்த்ததே காரணம். ஒரே நாடு ஒரே தேர்தலால், ஆட்சியில் இருக்கும் எந்த கட்சிக்கும், ஆபத்து இல்லை. யாரை குறிவைத்தும் கொண்டு வரவில்லை. மறைந்த முதல்வர் கருணாநிதி, ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்தினால் நாட்டுக்கு வளர்ச்சி கிடைக்கும் என, தெரிவித்திருந்தார். இந்த மசோதா யாருக்கும் எதிரானது இல்லை. ஒரே நாடு, ஒரே தேர்தலால், நாட்டில் வளர்ச்சி ஏற்படும். இதற்கு தமிழக மக்கள் ஆதரவு கொடுப்பர் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல், மாநில உரிமையை பறிப்பதாக இருப்பதாக, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறுகிறார். இது எப்படி பறிக்கும் என்பதை, கனிமொழி கூற வேண்டும். அவர், அரசியலுக்காக பேசுகிறார். தி.மு.க., அரசு, கோவையில் மறைந்த பாஷா உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் இருக்கும்போது தெளிவாக இருக்க வேண்டும். பயங்கரவாதத்தை வேருடன் அகற்ற வேண்டும். எனவே, கோவையில் வரும் வெள்ளிக்கிழமை கருப்பு நாளாக அறிவித்து, பா.ஜ., சார்பில் ஊர்வலம் நடத்தப்படும்.

மாற்று அரசியல்

பா.ஜ., கூட்டணியில், தினகரன் முக்கிய தலைவராக உள்ளார். பழனிசாமி, பொதுக்குழுவில் தங்கள் கட்சி வளர்ச்சி குறித்து பேசாமல், பா.ஜ., குறித்து பேசுகிறார். பா.ஜ., வளர்ச்சி எத்தனை மனிதர்களுக்கு பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது என்பதை, அவரது பேச்சு காட்டுகிறது. தமிழகத்திற்கு மாற்று அரசியல் வேண்டும் என்ற பாதையில் தேசிய ஜனநாயக கூட்டணி செல்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தலை பா.ஜ., கொண்டு வரவில்லை; ஏற்கனவே இருந்ததைத்தான் பா.ஜ., திரும்ப கொண்டு வருகிறது. தமிழகத்தில், திராவிட கட்சிகள் இல்லாத கட்சிகள் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பார்க்கிறோம். மக்கள் புதுவித ஆட்சியை எதிர்பார்க்கின்றனர். வரும் 2026 தேர்தல் புதிய களமாக இருக்கும். பா.ஜ.,விடம் வலிமையான கூட்டணி உள்ளது. கூட்டணி கட்சிகள் இணக்கமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

K.Ramakrishnan
டிச 18, 2024 22:31

பழம்பெரும் அரசியல்வாதி சொல்கிறார். கேட்டுக்க வேண்டியது தான்..


அப்பாவி
டிச 18, 2024 19:34

அதை அவிங்க சொல்லணும், நீங்க இல்லை.


அப்பாவி
டிச 18, 2024 17:29

அப்பிடி ஏதாவது அத்து வந்தால் நேரு, அமெரிக்கன் டீப் ஸ்டேட், அயல்நாட்டு சதின்னு காரணம் அடுக்கிட்டாப் போச்சு.


veera
டிச 18, 2024 15:34

மதுரையில் GST officer கைதாம்....GST officer என கூறிவருபவர்கள் ஜாக்கிரதை


ஆரூர் ரங்
டிச 18, 2024 14:10

குண்டுவெடிப்பில் எந்த அமைதி மார்க்கத்தவரும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டார்கள். உலக அதிசயம்.


ديفيد رافائيل
டிச 18, 2024 12:05

ஒரே நாடு ஒரே தேர்தலில் MLA, MP, உள்ளாட்சி எல்லாவற்றையும் கொண்டு வந்தா நல்லா இருக்கும். இந்த மாதிரி கொண்டு வந்தா தேர்தல் நியாயமா நடக்க வாய்ப்பு இருக்கு, ஓட்டுக்கு பணம் கொடுக்க கட்சிகளுக்கு வாய்ப்பே இல்லை.


pmsamy
டிச 18, 2024 11:43

அல்லக்கை எல்லாம் பேசுற அளவுக்கு கேவலமா ஆயிடுச்சு நிலைமை


MADHAVAN
டிச 18, 2024 11:13

?? மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், குஜராத், காஸ்மீர் போன்ற மாநிலத்தில் உன்னால ஒரே கட்டமா தேர்தல் நடத்த முடியுமா ? எப்புடி ஒரே நேரத்தில இந்தியா முழுசும் தேர்தல் நடத்த முடியும் ?


வைகுண்டேஸ்வரன் V
டிச 18, 2024 11:10

எந்த கட்சிக்கும் ஆபத்து இல்லை. இந்திய தேசத்துக்கு ஆபத்து. 543 பாராளுமன்ற தொகுதிகள், 4123 சட்ட மன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வேட்பாளர்கள் மனு பரிசீலிப்பு, வாக்குப்பதிவு நாட்கள் குறிப்பு, வாக்குப் பதிவு, வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிப்பு போன்ற செயல்களுக்கு 12-14 மாதங்கள் ஆகும். அதுவரை, மக்கள் தேர்ந்தெடுத்த அரசுகள் இல்லாமல், காபந்து அரசுகள் வைத்துக் கொண்டு, தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால், மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்துவதை நிறுத்தி, பட்ஜெட் இல்லாமல், எந்த அரசும் எந்த மசோதா, திட்டங்கள் போட முடியாமல் தேசமே ஸ்தம்பித்து விடும்.


ஆரூர் ரங்
டிச 18, 2024 17:25

உங்க கணக்கு ஆசிரியர் யாருன்னே தெரியல..1972 இல் நடக்க வேண்டிய சட்டமன்றத் தேர்தலை ஓராண்டுக்கு முன்பே பார்லிமென்ட் தேர்தலுடன் சேர்த்து நடத்த வைத்தார் கருணாநிதி. நேரமும் செலவும் மிச்சம் என காரணம் கூறினாரே. அது பொய்யா கோபால்?


Kanns
டிச 18, 2024 10:48

WHY BJP IS AFRAID OF BALLOT-PAPER& SPLIT-DIFFERENT ELECTIONS??? FEAR of LOSING Elections by Absence of EVM FRAUDS/Manipulations& Murder of Democracy. Even BJP SYMPATHISERS& CADRES DONT VOTE BJP as it CHEATS NATION& PEOPLE NativevHinduMajority With FALSE PROPAGANDAS WITHOUT ANY ACHIEVEMENTS except Art370Abolition by RSS Madhav& vvlong Pendg RamTemple& UselessModiStooge Ministers-MPs-MLAs. INFACT, NO LIVELIHOODS PROVIDED BUT Even PEOPLES OWN LIVELIHOOD DESTROYED BY Idiotic AADHAR-SpyMaster& POWER-MISUSES by Rulers, Stooge Officials esp BUREAUCRATS, Investigators/POLICE& JUDGES, NewsHungry BiasedMedia& Vested False Complaint Gangs VoteHungryParties groups/unions, women, SCs, advocates etc