உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குட்கா, பான் மசாலாவிற்கு தமிழகத்தில் மேலும் ஓராண்டு தடை

குட்கா, பான் மசாலாவிற்கு தமிழகத்தில் மேலும் ஓராண்டு தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடையை அடுத்தாண்டு மே 23ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.குட்கா, பான் மசாலாவை ஒழிக்க போலீசார், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடையை அடுத்தாண்டு மே 23ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குட்கா மீதான தடை 2013ல் கொண்டுவரப்பட்டு ஆண்டுதோறும் நீட்டிக்கப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tdhhkkqe&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மேலும் ஓராண்டு தடை

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்பதால், விநியோகம், பதுக்கலுக்கான தடை அடுத்தாண்டு மே 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

சுந்தர்
மே 26, 2024 02:15

அடுத்தடுத்த வருஷங்கள் தடை தொடரும். சிந்துபாத்.


செந்தில்குமார் திருப்பூர்
மே 25, 2024 20:56

பான் மசாலாவுக்கு தடை ஒரு முறை பயண்படுத்தும் பிலாஸ்டிக் பொருட்களுக்கு தடை இவை எதையுமே அரசு முறையாக நடைமுறை படுத்துவதில்லை மாமூல் வசூலிப்பவர்களுக்கு கொண்டாட்டம்


ஆரூர் ரங்
மே 25, 2024 17:42

ஆனா டாஸ்மாக் சரக்குக்கு நிரந்தர அனுமதி. ஏன்னா அது குட்காவைவிட நல்லது?


போதையரசன்
மே 25, 2024 17:16

ஏன் பசங்களா.... அபின் ஹெராயின் கஞ்சா... அப்படின்னு உயர்தரமா விற்க சொன்னா, இன்னமும் சாதாரண பாக்கெட்டையே விற்கிறீங்க.... முதல்ல திருந்துங்க... தமிழ்நாடு ஒரு வளர்ந்த மாநிலம்....


krishna
மே 25, 2024 16:57

EEN GUTKA PAN MASALA COMMISSION VARRADHU ILLAYA.ADHANAAL THADAYAA.ADHU SARI EPPO TASMAC KANJA THADAI.


sundarsvpr
மே 25, 2024 16:43

தற்காலிக தடை என்றால் தடையின் நோக்கமே புரியவில்லை. இதற்கு விளக்கம் அரசு கொடுக்கவேண்டும்.


மேலும் செய்திகள்