உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தந்தை வழியில் போகாத ஸ்டாலின்; நிர்மலா சீதாராமன் விமர்சனம்

தந்தை வழியில் போகாத ஸ்டாலின்; நிர்மலா சீதாராமன் விமர்சனம்

செங்கல்பட்டு: வரும் 2034ம் ஆண்டு நடக்கும் லோக்சபா பொதுத்தேர்தலின் போது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; 2029ம் ஆண்டு நடக்கும் பார்லிமென்ட் தேர்தலுக்குப் பிறகு தான், ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான பணிகளை ஜனாதிபதி தொடங்குவார். முழுவிபரம் தெரியாமல் பேசுபவர்களுக்கு நாம் இதனை சொல்ல வேண்டும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2c3l4yag&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தல் ஆணையத்திற்கும் இந்த சட்டத்திருத்தம் செய்வதனால் அதிகாரம் கிடைக்கும். இது தொடர்பான பரிந்துரைகளை கொடுத்ததும் ஒரு உயர்மட்டக் குழு தான். இந்த பரிந்துரையின் மூலமாக ஒரு நிரந்தர கட்டமைப்பு உருவாகிறது. 2029ம் ஆண்டில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறைகளுக்கான பணிகளை தொடங்கினால், 2034ம் ஆண்டு நடக்கும் பொதுத்தேர்தலின் போது செயல்படுத்தப்படும்.2034ம் ஆண்டுக்கு முன்பு இந்த நடைமுறை செயல்படுத்த வாய்ப்பில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்களிடம் இந்த உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். 1951ம் ஆண்டு முதல் 1960ம் ஆண்டு காலகட்டங்களில் சட்டசபைக்கும், பார்லிமென்ட்டுக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடந்தது. 1957ம் ஆண்டில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. அப்போது, மாநில சட்டசபைகளாக இருந்த, பீஹார், பாம்பே, மெட்ராஸ், மைசூர், பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட சட்டசபைகளை கலைத்து விட்டு, பார்லிமென்ட் தேர்தலுடன் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த முறை ஏன் மாற்றப்பட்டது என்பது அடுத்த கேள்வி? 1961 முதல் 1970 வரையில் 5 மாநிலங்களில் 10 ஆண்டுகளில் 3 முறை தேர்தல் நடத்தப்பட்டது. பீஹார், கேரளா, பஞ்சாப், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டத்திருத்தம் 356ஐ பயன்படுத்தி ஆட்சி கலைப்பது உள்ளிட்ட பல காரணங்களால் 10 ஆண்டுகளில் 3 முறை தேர்தல் நடந்தது. 1959ல் உலகிலேயே ஒரு கம்யூனிஸ்ட் அரசு ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்டது கேரளாவில் தான். இந்த ஆட்சியை ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் தூக்கி போட்டது. 1971 முதல் 1980 வரையில் 14க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 3முறை தேர்தல் நடைபெற்றது. ஒடிசாவில் 10 ஆண்டுகளில் 4 முறை தேர்தல் நடந்துள்ளது. இதனால், மக்கள் நலப்பணிகள் பாதிக்கப்பட்டன. இதுபோன்ற ஸ்திரத்தன்மை இல்லாத அரசுகளால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக சட்ட ஆணையம் கருதியது. அடுத்தடுத்து தேர்தல் நடத்துவதால் செலவு அதிகரிக்கிறது. பார்லிமென்ட் நிலைக்குழுவானது, ஒரே நாடு ஒரே தேர்தலை பரிந்துரைக்கிறது. 2019ல் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற 19 கட்சிகளில் 16 கட்சிகள் ஒப்புக் கொண்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோல, ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழுவும் நாடு முழுவதும் 47 கட்சிகளிடம் கருத்து கேட்டன. அதில், 32 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அ.தி.மு.க., பா.மக., த.மா.கா., புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆம்ஆத்மி, தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 15 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. நிர்வாக சிக்கல்களை தவிர்க்கவும், மக்கள் நலத்திட்டங்களை தடையின்றி செய்யவும் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அவசியமாகிறது. 2024 லோக்சபா தேர்தலுக்கு மட்டும் ரூ.1 லட்சம் கோடி செலவாகியுள்ளது. அதுவே, ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்தினால், ரூ.12 ஆயிரம் கோடி மிச்சமாகும். அதனை மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தலாம். நாட்டின் ஜி.டி.பி., வளர்ச்சி1.5 சதவீதம் அதிகரிக்கும் என்கின்றனர். ரூ.4.5 லட்சம் கோடி நமது பொருளாதாரத்தில் இன்னும் அதிகரிக்கும்.2015ல் பார்லிமென்ட் நிலைகுழுவின் தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதர்சன் நாச்சியப்பன் ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வர வலியுறுத்தினார். 2019ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், ஒரே நாடு ஒரே தேர்தல் சிறப்பான ஒன்று என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். அதேபோல, மறைந்த தலைவர் கருணாநிதியும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்தார். இதனை அவரது சுயசரிதையிலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இன்று முதல்வராக இருக்கும் ஸ்டாலின், தந்தை சொன்ன வழியில் போகாமல் எதிர்ப்பேன், என்று எதிர்க்கிறார். இப்போது, ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்ப்பவர்கள் அனைவரும் இதனை ஆதரிப்பவர்கள் தான். அரசியல் ஆதாயத்திற்காக, அதனை எதிர்ப்பேன் என்று எதிர்க்கின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Chandrakanthan.R
ஏப் 09, 2025 09:19

அப்போதாவது , தேர்தலில் போட்டியிடுங்க.


Chandrakanthan.R
ஏப் 09, 2025 05:22

தந்தை/கணவர் வழியில் போகாத ஆளுனர்,மத்திய அமைச்சர் பி. ஜே. பி யிலும் உண்டு.


அப்பாவி
ஏப் 06, 2025 10:44

தாயி... நீங்க உங்கப்பா வழியில் ரயில்வேயில் புகுந்து கார்டாகி இருக்கலாமே. விழுப்புரத்திலேயே போஸ்டிங் வாங்கியிருக்கலாமே.


Chandrakanthan.R
ஏப் 09, 2025 05:27

தமிழ் இசை பாணியில் ஸ்டாலின் தன்னிச்சையாக செயல்படுகிறார் .


pmsamy
ஏப் 06, 2025 07:47

யார் எந்த வழியில போகணும்னு சொல்ற தகுதி நிர்மலா சீதாராமனுக்கு இல்லை


naranam
ஏப் 05, 2025 19:43

திமுக வின் தோலை உரிக்க இவுங்க ஒருத்தர் போதும். நாடாளுமன்றம், பொது மேடைகளிலும் தைரியமாக திக மற்றும் திமுகவின் முக மூடியை கிழித்துக் கொண்டிருக்கிறார். இவரைக் கண்டாலே நடுங்கிக் கொண்டே திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்னங்கால் பிடரியில் பட தலை தெறிக்க ஒடுவதைப் பார்க்க ஒரே காமெடியாக இருக்கிறது.


raja
ஏப் 05, 2025 19:42

இன்று நடக்கும் தமிழக அரசியல் இன்னும் ஐந்து ஆண்டுகளில் காணாமல் போகும். அண்ணாமலை வந்ததினால் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது . இது இன்னும் ஏற்றம் பெற்று மக்கள் வாழ்க்கை சீர்பெறும் ஐம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் கொட்டங்கள் அடங்கும்.


Varadarajan Nagarajan
ஏப் 05, 2025 19:25

தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர் எதோ காரணங்களால் இறந்துவிட்டால் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தாமல் வாக்குகள் அடிப்படையில் இரண்டாமிடத்தில் இருந்த வேட்பாளரை நியமிக்கவேண்டும். இடைத்தேர்தல் என்பது ஆளும்கட்சியின் பண மற்றும் அதிகாரபலத்தால் வெற்றியை நியமிக்கப்படுகின்றது. வீண் செலவும் குறையும்.


Anantharaman Srinivasan
ஏப் 05, 2025 18:53

இன்று அரசியலில் அரை வேக்காடுகள் தான் அதிகம். 1967 ல் காங்..சை வீழ்த்தி திமுக ஆட்சியை பிடித்த போதே ஓரே தேர்தல் தான் நடந்தது.


மீனவ நண்பன்
ஏப் 05, 2025 18:40

அண்ணா சாலையில் தான் செல்வார்


sankaranarayanan
ஏப் 05, 2025 18:28

தந்தை சொன்ன வழியில் போகாமல் எதிர்ப்பேன், என்று எதிர்க்கிறார். இப்போது, ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்ப்பவர்கள் அனைவரும் இதனை ஆதரிப்பவர்கள் தான் தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்பதெல்லாம் இந்த காலத்திற்கு பொருந்தாது எங்கள் அப்பா சொல்வதுதான் வேத வாக்கு அவர் அப்பா சொன்னது பொய் வாக்கு அவைகள் இக்காலத்திற்கு பொருந்தாது திராவிட நாடு ஒரு தனி நாடு என்பதை இப்போ தளபதி அப்பா நிரூபித்து காண்பிப்பார் என்ற நப்பாசை எல்லாமே எதற்கு மக்களுக்கு இன்று நாளை என்ன தேவை என்பதை அறிந்து ஆளுவதற்கு இங்கே ஒரு நாதி கூட இல்லை வெறும்பேச்சுதான் மிச்சம் அடுக்கு மொழியில் பேச்சு புது வார்த்தைகள் மக்களை கவர் செய்யும் நையாண்டித்தனமே தவிர மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கு ஒரு பிரயோஜமும் இல்லை