உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாம்பரத்தில் மூவர் உயிரிழப்பு; சுகாதாரமற்ற குடிநீரே காரணம் என குற்றச்சாட்டு!

தாம்பரத்தில் மூவர் உயிரிழப்பு; சுகாதாரமற்ற குடிநீரே காரணம் என குற்றச்சாட்டு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: பல்லாவரம் பகுதியில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டுக்குட்பட்ட காமராஜ் நகர் கன்டோன்மென்ட் பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது. இதனை அறியாமல் குடித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, பேதி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 20க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oicjjeko&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த திரிவேதி என்பவர் உயிரிழந்தார். இதையடுத்து, பல்லாவரம் மலைமேடு பகுதியில் அமைச்சர் த.மோ. அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்த அவர், உடனடியாக அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், '23 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை. அவர்கள் சாப்பிட்ட உணவுகளில் ஏதேனும் பிரச்னையா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குடிநீர் மூலம் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அந்தப் பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டிருக்கும். இன்னும் ஒரு மணி நேரத்தில் காரணம் தெரிய வந்துவிடும், எனக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மோகனரங்கன், வரலட்சுமி ஆகியோரும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.கண்டனம்சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உயிரோடு விளையாடியிருக்கும் ஸ்டாலினின் தி.மு.க., அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:புயல் கரையை கடந்த பிறகு கழிவுநீர் கலக்காமல் குடிநீர் வழங்கப்படுகிறதா? என்பதை அரசு உறுதி செய்திருக்க வேண்டும். சென்னை தாம்பரத்தில் சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உயிரோடு விளையாடியிருக்கும் தி.மு.க., அரசுக்கு கடும் கண்டனம். தமிழகம் முழுவதும் உடனடியாக சீரான, சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.குடிநீர் என்பது மிக அடிப்படையான ஒன்று; அதனை மிகுந்த கவனத்துடன் விநியோகிக்க வேண்டியது அரசின் கடமை. புயல் கரையைக் கடந்ததும், குடிநீர், கழிவுநீர் குழாய்கள் இடையே எவ்வித கலப்பும் இன்றி முறையாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறதா? என்பதை அரசு உறுதி செய்திருக்க வேண்டும்.மெத்தனப் போக்குடன் அதை செய்யாமல் விடுத்து, சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உயிரோடு விளையாடியிருக்கும் ஸ்டாலினின் தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம்.உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளோருக்கு தக்க சிகிச்சை வழங்கி, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்து, தமிழகம் முழுவதும் உடனடியாக சீரான, சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு தி.மு.க., அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Bhaskaran
டிச 06, 2024 13:42

உலகின் மோசமான நகராட்சி பல்லாவரம் .ஊழலில் முதலிடம் பணம் வாங்கினாலும் வேலையே ஒழுங்கா seithu கொடுக்க மாட்டார்கள் பாலாற்று தண்ணீர் கல்யாணமண்டபம் ஹோட்டலுக்கு விற்பாங்க .


அப்பாவி
டிச 06, 2024 09:04

எங்கே புரோட்டா, ஷவர்மா, பிரியாணி சாப்புட்டாங்களோ விசாரியுங்க.


Brahamanapalle murthy
டிச 05, 2024 20:40

what nonsense response. If they really worried, they should have told we are waiting for the Lab results instead of speculating and diverting the serious issue. this is one more game of diversion tactics rather than accepting the blame.


sridhar
டிச 05, 2024 17:09

வேறு வேறு குடும்பங்களை சேர்ந்த 23 பேர் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக உணவு சாப்பிட்டார்களா . நம் மந்திரிகள் பெரும் அறிவாளிகள் .


Kasimani Baskaran
டிச 05, 2024 17:01

வேங்கை வயல் பிரச்சினையே தீர்ந்த பாடில்லை. இதில் புதிதாக இது வேறு. மோடியின் குடிநீர் திட்டம்தான் பிரச்சினைக்கு காரணம் என்று உருட்டாமல் இருக்க வேண்டும். பொதுவாகவே மழை காலத்தில் குடிநீரை கொதிக்க வைத்து குடிப்பது பாதுகாப்பானது.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 05, 2024 14:39

இப்படியெல்லாம் மக்கள் தொகையைக் குறைப்பதும் திராவிட மாடலின் கொள்கையா ????


Narayanan
டிச 05, 2024 13:13

ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது நீங்கள் எவ்வளுவு மரியாதையை கொடுத்தீர்கள் ? நீங்கள் ஆட்சியில் நீடிக்க செய்ததாக அவர் நினைத்து கொண்டும் உங்களால் எதிர்கட்சித்தலைவர் பதவியில் இருந்தாலும் ஒன்றும் செய்யமுடியாத நபர் என்றும் கருதி தூக்கி அடித்து பேசுகிறார் . உங்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லைதானே . அனைத்து வரி வசூல்களுக்கும் வாய் பொத்திதானே இருக்கிறீர்கள் .


Anantharaman Srinivasan
டிச 05, 2024 13:12

வாந்தியெடுத்து அட்மிட்யாகியிருக்கும் எல்லோரும் ஒரேயிடத்திலா சாப்பிட்டார்கள்..?? அப்ப அது அம்மா உணவகமா..??


Narayanan
டிச 05, 2024 13:00

இந்த உயிர் இழப்பிற்கு திராவிடமாடல் ஆட்சிதான் காரணம் .


raja
டிச 05, 2024 12:41

இத கேடுகெட்ட திராவிட மாடலை தான் உலகமே எங்க நாட்டுக்கு வராதான்னு ஏங்குதுண்ணு முதல்வர் பீத்திகிட்டு திரியிரார்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை