உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒருவரே அனைத்து கட்சியிலும் உறுப்பினராகும் வாய்ப்பு: மொபைல் போன் செயலியால் புது சிக்கல்

ஒருவரே அனைத்து கட்சியிலும் உறுப்பினராகும் வாய்ப்பு: மொபைல் போன் செயலியால் புது சிக்கல்

சென்னை: அரசியல் கட்சியினர், 'மொபைல்போன் செயலி' வாயிலாக, உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு ள்ளதால், ஒருவரே பல கட்சி களில் உறுப்பினராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மை டி.வி.கே., சட்டசபை தேர்தல் நெருங்குவதால், ஆளுங்கட்சியா ன தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் என அனைத்து கட்சிகளும், உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தை நடத்தி வருகின்றன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cnahderm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க.,வினர் ஜூலை 1 முதல், 'ஓரணியில் தமிழகம்' என்ற பெயரில், வீடு வீடாகச் சென்று, மொபைல்போன் செயலி வாயிலாக உறுப்பினர்களை சேர்க்கின்றனர். இதுபோல, த.வெ.க., வில் உறுப்பினர்களை சேர்க்க, மை டி.வி.கே., என்ற மொபைல் போன் செயலியை, அக்கட்சியின் தலை வர் விஜய் துவக்கி வைத்தார். அ.தி.மு.க.,விலும் ஒவ் வொரு ஓட்டுச் சாவடிக்கும், ஒரு 'வாட்ஸாப்' குழுவை உருவாக்கி, குறைந்தது 300 பேரை உறுப்பினர்களாக சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சட்டசபை தொகுதி வாரியாக, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க., - அ.தி.மு.க., - த.வெ.க., என அரசியல் கட்சியினர், வீடு வீடாக சென்று, மக்களை சந்தித்து உறுப்பினர்களாக சேர்க்கின்றனர். அரசியல் கட்சி நிர்வாகிகள், வீடு தேடி வந்து கேட்ட பிறகு, 'உறுப்பின ராக சேர மாட்டேன்' என சொன்னால், ஏதேனும் பிரச்னை செய்யக்கூ டும் என்ற அச்சத்தில், எந்த கட்சியினர் வந்தாலும், அவர்கள் கட்சியில் பொதுமக்கள் உறுப்பினராகி விடுகின்றனர். மொத்த மக்கள் தொகை இதனால், ஒரே நபர் அனைத்து கட்சிகளிலும் உறுப்பினராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஒவ்வொரு கட்சியிலும் கோடிக்கணக்கில் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளதாக அறிவிக்கின்றனர். அவர்கள் கூறும் எண்ணிக்கையை கூட்டிப் பார்த்து கணக்கிட்டால், தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை யை தாண்டும்.

தி.மு.க.,வில் 5 லட்சம் பேருக்கு பதவி

விஜய் ரசிகர்களில், 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், பெண்கள் அதிகம். இதனால், அவரது த.வெ.க.,வில் அதிகமாக இளைஞர்கள் உள்ளனர். எனவே, விஜய் கட்சிக்கு இளைஞர்கள் செல்வதை தடுக்க, புதிய திட்டத்தை தி.மு.க., அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, பூத் கமிட்டி மற்றும் கட்சி நிர்வாக அமைப்பில் உள்ள பதவிகளில், தி.மு.க., இளைஞர் அணியினர் 5 லட்சம் பேர் நியமிக்கப்படுகின்றனர். இதற்காக, இளைஞர் அணித் தலைவரும், துணை முதல்வருமான உதயநிதிக்கு, கட்சி தலைமை இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆளும் கட்சியில் பொறுப்பு என்பதால், இளைஞர்கள் வருவர் என, தி.மு.க., தலைமை கணக்கு போடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

krishna
ஆக 01, 2025 16:30

AAHA SUPER CHANCE.OVVORU KATCHI URUPPIBAR AAGUM PODHU 200 ROOVAA COOLIE ENDRAAL EERA VENGAAYAM VENUGOPAL ORU KILO ARISI OVIYA VIJAY RAJ RAMESH PREMJI THANJAI MANNAR PONDRA OOPIS CLUB BOYS ODI VANDHU SERUVSARGAL.


ராமகிருஷ்ணன்
ஆக 01, 2025 13:00

அப்போ தமிழக கட்சிகளின் கணக்குபடி தமிழக மக்கள் தொகை 32 கோடிகளை தாண்டி விடும். எல்லாம் நல்லதாகவே முடியும்.


ஆரூர் ரங்
ஆக 01, 2025 11:14

ஏணியில் ஒரு குத்து. பனைமரத்தில் ஒரு குத்து.


raja
ஆக 01, 2025 05:17

நம்ப திராவிட மாடல் முதல்வர் போலவே முஹம்மது பின் துக்ளக் என்று ஒரு முஸ்லீம் அரசன் ஆட்சி புரிந்தான் என்று வரலாறு ....


பிரேம்ஜி
ஆக 01, 2025 06:55

ஆம். துக்ளக் ஆட்சியே தான்!


முக்கிய வீடியோ