உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமும் ஒரு பெருமாள்-29

தினமும் ஒரு பெருமாள்-29

மகிழ்ச்சியாக வாழ...

பெங்களூரு ஹலசூரு பஜார் வீதியில் அருள்புரிகிறார் சதுர்புஜ கண்ணன். இவரை வழிபட்டால் என்றும் மகிழ்ச்சிதான். பழமையான இக்கோயிலில் தினசரி, வாராந்திர, வருடாந்திர உற்ஸவம் நடைபெறுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் கண்ணனுக்கு சிறப்பு அலங்காரம் நடக்கும். மார்கழி பஜனையில் திவ்ய பிரபந்தமும், திருப்பாவையும் பாராயணம் செய்கிறார்கள். திருமணம் இனிதே நடைபெற தை மாதம் இங்கு ஆண்டாளுக்கு 100 தடா அக்கார அடிசில் செய்து வழிபடுகிறார்கள். கண்ணபிரானுக்கு வெண்ணெய் சாத்தி வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். சக்கரத்தாழ்வாருக்கு நெய் விளக்கு ஏற்றினால் வழக்கு விவகாரம் சாதகமாகும். ஆழ்வார்களுக்கும், ஆச்சார்யார்களுக்கும் சன்னதிகள் உள்ளன. பெங்களூரு சிவாஜி நகர் பஸ் ஸ்டாண்டில் இருந்து 4 கி.மீ.,நேரம்: காலை 6:00 - 10:30 மணி மாலை 5:30 - 8:30 மணிதொடர்புக்கு: 94492 55373அருகிலுள்ள தலம்: ஹலசூரு பஜார் வீதி அனுமன்நேரம்: காலை 6:00 - 10:00 மணி மாலை 5:30 - 8:00 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ