உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்களுக்கு ஒரு சிகிச்சை; முதல்வருக்கு ஒரு சிகிச்சை?

மக்களுக்கு ஒரு சிகிச்சை; முதல்வருக்கு ஒரு சிகிச்சை?

துாத்துக்குடி: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசை அளித்த பேட்டி: தமிழகத்திற்கு மத்திய பா.ஜ., அரசு எதுவுமே செய்யவில்லை என வீடு, வீடாகச் சென்று சொல்லுமாறு தி.மு.க.,வினரிடம் முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். பிரதமர் மோடியின், தற்போதைய வருகையில் மட்டும், தமிழகத்துக்கு 4800 கோடி ரூபாய் திட்டப் பணிகளை வழங்கி இருக்கிறார். இதை வீடு, வீடாகச் சென்று தி.மு.க.,வினர் சொல்வார்களா? பிரதமர் மோடி, பாரபட்சம் இல்லாமல் திட்டங்களை கொடுக்கிறார். ஆனால், 'உங்களுடன் ஸ்டாலின்' என தி.மு.க.,வினர் மக்களை ஏமாற்றுகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன், ஊர் ஊராக சென்று மக்களிடம் ஸ்டாலின் வாங்கிய 14 லட்சம் மனுக்கள், பெட்டிக்குள் துாங்குகின்றன. பிரதமர் மோடி வந்த பிறகுதான், கங்கைகொண்ட சோழபுரத்தின் மீது, கவனம் திரும்பி உள்ளது. சுகாதாரத் துறை சிறப்பாக இருப்பதாக அந்த துறையின் அமைச்சர் கூறுகிறார். அரசு மருத்துவமனைகள் சிறப்பாக இருக்கிறது என்றால், முதல்வர் ஸ்டாலின், தனியார் மருத்துவமனைக்கு சென்றது ஏன்? மக்களுக்கு ஒரு சிகிச்சை, முதல்வருக்கு ஒரு சிகிச்சையா? தமிழகத்தில் 38 மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும், நீரிழிவு நோய்க்கான டயாலிசிஸ் சிகிச்சை மையங்கள், மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை அமைச்சர், 'கிட்னி திருட்டு நடக்கவில்லை. அது ஒரு முறைகேடு' என்கிறார். நம் வீட்டுக்கு திருடன் வந்தால், 'திருட்டு நடக்கவில்லை; முறைகேடாக எடுத்து சென்று விட்டான்' எனக் கூறுவோமா? தமிழகத்தில் பாலியல், கொலை, கொள்ளை, கிட்னி திருட்டு என, எல்லாவற்றிலும் தி.மு.க., வினருக்கு பங்கு உள்ளது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rajan A
ஜூலை 27, 2025 13:56

நீங்கள் கூடத்தான் காரில் போகிறீர்கள். மக்கள் பஸ்ஸில் போகிறார்கள். காரை விட்டுவிட்டு பஸ்ஸில் போவீர்களா? அவரவர் வசதிக்கேற்ப செலவு செய்கிறார்கள். எய்ம்ஸ் பற்றி கிளறி விட நீங்களே துணை போவது சரியா?


sivakumar g
ஜூலை 27, 2025 12:28

மோடிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் உத்தரப் பிரதேசத்தில் உள்ள கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு செல்வாரா சொல்லுங்கள்??????


Senthoora
ஜூலை 27, 2025 06:49

பார்க்கலாம் உங்க தலைவர்கள் விழும்போது எந்த ஆஸ்பத்திரிக்கு போறாங்க என்று.


rama adhavan
ஜூலை 27, 2025 07:34

அடுத்தவர் விழவேண்டும் என நினைப்பவர்கள் அவர்கள் தத்தம் வீட்டையும் நினைத்து இருந்தால் இப்படி சொல்ல மாட்டார்கள். தன் வினை தன்னை சுடும்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 27, 2025 08:52

எங்கள் தலைவர்கள் உடல் நலம் குன்றினால் சந்தேகம் வேண்டாம் தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெறுவார்கள் காரணம் அரசு மருத்துவமனைகளின் லட்சனம் அப்படி.....!!!


D Natarajan
ஜூலை 27, 2025 06:35

நாங்கள் என்ன ஏழைகளா, ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர்கள் . நாங்கள் அரசாங்க ஆஸ்பத்திரியுக்கு போகலாமா . அப்பல்லோ தான் எங்கள் விருப்பம்


Mani . V
ஜூலை 27, 2025 04:46

இதென்னமா கேள்வி? தமிழ்நாட்டின் தலை சிறந்த கொள்ளையர்களுக்கு ஸாரி பணக்காரர்களுக்கு தனி சிகிச்சை அளிப்பது தவறா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை