உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்செந்துார், பழனி, திருவண்ணாமலை கோவில்களிலும் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு: அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்துார், பழனி, திருவண்ணாமலை கோவில்களிலும் ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு: அமைச்சர் சேகர்பாபு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை முருகன் கோவிலில் 3.55 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் பக்தர்களுக்கான லிப்ட் வசதியை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 4 ஆயிரம் கோவில்கள் கும்பாபிஷேகம் செய்வது தான் எங்கள் இலக்கு. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க., ஆட்சியில், நான்காயிரம் கோவில் தான் திருப்பணிக்கு எடுத்துக் கொண்டார்கள். திமுக ஆட்சி ஏற்பட்ட பிறகு, 10 ஆயிரம் கோவில்கள் திருப்பணிகள் நடைபெற்று, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2vly5klp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருப்பதி ஆன்லைன் மூலம் தரிசன முன்பதிவு திட்டம் போல, திருச்செந்துார், பழனி, திருவண்ணாமலை கோவில்களில் ஏற்பாடு செய்வதற்கான பணிகள் துவங்கப்படள்ளது. விரைவில் முதல்வரால் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.சுவாமிமலையில் லிப்ட் அமைக்கும் பணி, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். திருக்கழுகுன்றம், திருப்பரங்குன்றம் கோவில்களுக்கு புதிய ரோப் கார் அமைக்கும் பணிகள் விரைவில் துவங்கும். பக்தர்கள் வசதிக்காக பழனி மலையில் மேலும் ஒரு ரோப் கார் சேவை புதிதாக அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anbu Arumugam
ஜூன் 07, 2025 19:37

தங்கும் அறைகளும் ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்ய வசதி செய்தால் நன்றாக இருக்கும்.


Annamalai Srinivasan
ஜூன் 07, 2025 12:46

பக்தர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக நடத்த வேண்டும் பணம் கொடுத்து விட்டு வந்தால் தனி மரியாதை இலவச தரிசனம் என்று போர்டு பார்க்க மிகவும் வருத்தம் அளிக்கிறது இது போன்ற பாகுபாடு இல்லாமல் கேரளாவில் உள்ளது போல் அனைவரும் ஒரே வழி ஒரே தரிசனம் பார்க்க வேண்டும்


Ramesh Sargam
ஜூன் 05, 2025 20:18

அப்படி கிடைக்கும் வருமானத்தில் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அங்கு சாமி கும்பிட வரும் பக்தர்களுக்கு அன்னதானம் போடவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை