உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் சூதாட்டம்; புதிய சட்டம் இயற்ற அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

ஆன்லைன் சூதாட்டம்; புதிய சட்டம் இயற்ற அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'ஆன்லைன் சூதாட்டத்தால் 86 பேர் தற்கொலை செய்யப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றத்தில் தடை பெற முடியாவிட்டால் உடனடியாக புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.அவரது அறிக்கை: திண்டுக்கல் மாவட்டம் செந்துறை குரும்பம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் என்ற பால் வணிகர், ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மகேந்திரனையும் சேர்த்து ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்திருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதில் மட்டும் ஆர்வம் காட்டும் தமிழக அரசு, ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகளை தடுப்பதற்காக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இனியும் எவரும் ஆன்லைன் சூதாட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளாத வகையில், உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக தடை பெறுவது சாத்தியமில்லை என்றால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வதற்காக புதிய சட்டத்தை சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தாமரை மலர்கிறது
மார் 27, 2025 19:19

என்ன சட்டம் இயற்றினாலும் கவர்னரின் அப்பருவல் கிடைக்காது.


Petchi Muthu
மார் 27, 2025 15:58

80 க்கு மேற்பட்ட உயிர்கள் போயிருக்கிறது... இனியாவது அரசு நடவடிக்கை எடுத்து விழித்துக் கொள்ள வேண்டும்


Ray
மார் 27, 2025 20:09

அரசு தடைச்சட்டம் கொண்டுவந்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆளுநர் அந்த கோப்பை கிடப்பில் போட்டுள்ளார். இந்த உண்மையை சொல்ல தவிர்த்து அந்த ஆனானப்பட்ட ராமதாசும் புது சட்டம் கொண்டு வரணும்னு ஏதேதோ சொல்றார். இது ஒரு சனா நாயகம்னு சொல்றாங்க ஓடிப்போய் ஒட்டு போட்டு வலுவில் அவங்களுக்கு அடிமையாகணும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை