உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி; வேட்புமனு தாக்கலுக்கான விதிமுறைகள் வெளியீடு

3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி; வேட்புமனு தாக்கலுக்கான விதிமுறைகள் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில்; சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டசபை தொகுதிகளில் வரும் 30ம் தேதி முதல் ஏப்ரல் 06ம் தேதி வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.* பொதுவிடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள மார்ச் 31, ஏப்ரல் 1 மற்றும் 05ம் தேதிகளில் வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியாது* வேட்புமனு தாக்கல் செய்ய வருபவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்* தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளர் உள்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்* வேட்பாளர்கள் வேட்புமனுவை இணையதளத்தில் (suvidha portal) பூர்த்தி செய்திடலாம். ஆனால், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து நேரில் தாக்கல் செய்ய வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதோடு, 16 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் முகவரியும் வெளியிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !