| ADDED : மே 23, 2025 06:15 AM
தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும், தொடர்ந்து மக்கள் களப்பணியாற்றுகிறோம். முதற்கட்ட கொரோனா வந்த காலத்தில், ஸ்டாலின்தான் களத்தில் இருந்து மக்கள் பணியாற்றினார்; வேறு எந்த அரசியல் தலைவரும் களத்துக்கு வரவில்லை. இரண்டாவது கட்டமாக கொரோனா வந்தபோது, முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.முதற்கட்ட கொரோனாவின்போது முதல்வராக இருந்த பழனிசாமியும் வரவில்லை. பா.ம.க.,வின் இரு அய்யாக்களும் வரவில்லை. வேறு எந்த நடிகரும் வரவில்லை. இவர்கள் எல்லாம் தேர்தல் வந்தால்தான் வெளியே வருவார்கள்.தி.மு.க., ஆட்சியில்தான் தனிநபர்கள் பணப்பயன் பெற்றனர். பொருளாதார ரீதியில் எல்லோருக்கும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கிராமம், நகரம் எல்லாம் வளர்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. - பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்