உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மணல் குவாரி திறந்தால் நிலத்தடி நீர் குறையும்

மணல் குவாரி திறந்தால் நிலத்தடி நீர் குறையும்

வரும் 1ம்தேதி கடலுார் மாவட்டத்தில், இரண்டு இடத்திலும், புதுக்கோட்டை மாவட்டத்தில், மூன்று இடத்திலும், தஞ்சை, ராணிப்பேட்டை, நாமக்கல் மாவட்டங்களில், தலா ஒரு இடத்திலும், எட்டு மணல் குவாரிகளை, நீர்வளத்துறை திறக்கிறது. அதற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில், கடந்த 2023ல், 25 மணல் குவாரிகள் திறக்கப்பட்டு, கனிம வளத்துறை வரையறை ஒப்புதல் வாயிலாக, அந்த மணல் குவாரிகளில் மணல் எடுக்க அனுமதிக்கப்பட்டது. அந்த மணல் குவாரிகளில், குறுகிய காலத்திலேயே, கனிமவளத் துறை, நீர்வளத் துறை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதை விட, அதிக அளவு வெட்டி எடுத்து விட்டனர். தற்போது அனுமதிக்கப்பட்ட, எட்டு மணல் குவாரிகளில், மணல் எடுப்பதால், மணல் குவாரிகள் அமைய உள்ள பகுதிகளில், நிலத்தடி நீர் குறைந்து, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். தற்போது பெய்து வரும் பருவ மழையில், அந்தப் பகுதியில் போதிய நீரை வைத்து, விவசாயிகள் நல்ல நிலையில் விவசாயம் செய்துள்ளனர். ஆனால், மணல் குவாரி திறக்கப்பட்டு, மணல் எடுக்கப்பட்டால், நீர்மட்டம் குறையும்; விவசாயம் பாதிக்கப்படும். எனவே, தமிழகத்தில் தற்போது திறக்க திட்டமிட்டுள்ள, எட்டு மணல் குவாரிகளின் அனுமதியை, சுற்றுச்சூழல் துறை உடனே மறுபரிசீலனை செய்து, மணல் குவாரி திறப்பை கைவிட வேண்டும். - ராமதாஸ் நிறுவனர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ