உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  தொழில் வளர்ச்சிக்கு எதிர்ப்பா... ஆதரவா?

 தொழில் வளர்ச்சிக்கு எதிர்ப்பா... ஆதரவா?

பா.ம.க., தலைவர் அன்பு மணிக்கு, அமைச்சர் ராஜா பதில்: அன்புமணி குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. கடந்த, 2021ல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை, 1,016 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, 11.40 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, 34 லட்சம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 80 சதவீதம் அதாவது, 809 திட்டங்கள் நிலம் ஒதுக்கீடு, கட்டுமானம், சோதனை உற்பத்தி, வணிக உற்பத்தி என, பல்வேறு நிலையான செயல்பாடுகளில் உள்ளன. புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் உள்ளபடி, முதலீடுகள் பல கட்டங்களாக வர சில ஆண்டுகள் ஆகும் என்பதை கூட அறியாமல், உளறி தள்ளுவது நகைப்புக்குரியது. இத்தகைய குற்றச்சாட்டுகள், தமிழக மக்களின் முன்னேற்றத்தை சீர்குலைக்கும் நோக்குடனும், குறுகிய கால அரசியல் நாடகத்துக்காகவும் முன்வைக்கப்படுகின்றன. தமிழகத்தில், 'செமி கண்டக்டர்' துறைக்கான நல்ல சூழல் இருந்தபோதும் கூட, முக்கியமான திட்டங்கள் வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டபோது, இவர்கள் எதிர்ப்பு குரல் எழுப்புவதில்லை. அவர்கள், தமிழக தொழில் வளர்ச்சியை ஆதரிப்பதாக கூறி கொண்டே, தொழில் பூங்கா திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துவதை எதிர்ப்பதும், விமான நிலைய விரிவாக்கம் போன்ற வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை எதிர்ப்பதும், பெரும் முரண்படாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை