உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓபிஎஸ்

பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறினார் ஓபிஎஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் தலைமையிலான தொண்டர்கள் உரிமை மீட்பு குழு வெளியேறுவதாக அறிவித்துள்ளார். 2026ம் ஆண்டு நடக்கவிருக்கம் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zbxxoef5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பண்ருட்டி ராமச்சந்திரன் பேசியதாவது; ஓபிஎஸ் தலைமையில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழுவின் உயர்நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் எதிர்காலம் குறித்தும், மக்களின் பிரச்னைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டு, 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இடம்பெற்றிருந்தது. ஆனால், இன்று முதல் அந்தக் கூட்டணியுடன் உறவை முறித்துக் கொண்டது. தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் சார்பில் அதன் தலைவர் ஓபிஎஸ் விரைவில் பல்வேறு இடங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். எந்தக் கட்சியினருடன் தற்போதைய சூழலுக்கு கூட்டணி கிடையாது. எதிர்காலத்தில் நிலைமைக்கு ஏற்ப கூட்டணி முடிவு செய்யப்படும்.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கான காரணம் நாடறிந்தது தான். எடுத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எத்தனையோ தேர்தலை தமிழகம் சந்தித்துள்ளது. அந்த வகையில், 2026 தேர்தலும் வரும். அதில், சரியான கூட்டணி, மக்களை சரியான திசையில் வழிநடத்திச் செல்லும் கூட்டணி எதிர்காலத்தில் அமையும், எனக் கூறினார். இதனிடையே, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது குறித்து ஓபிஎஸ் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் பதிலளிக்கையில், 'சென்னையில் இருக்கும் போது நடைபயிற்சி செய்வது வழக்கம். நடைபயிற்சியின் போது அவர் அங்கிருந்தார். வணக்கம் சொல்லி விட்டு சென்றோம்,' என்றார்.சந்திக்காத வருத்தம்சமீபத்தில் பிரதமர் மோடி, தமிழகம் வந்திருந்தார். அவர் திருச்சி வந்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அவரை சந்தித்துப் பேச நேரம் வழங்கப்பட்டது. ஆனால், ஓபிஎஸ் நேரம் கேட்டபோது, அனுமதி வழங்கப்படவில்லை. இந்த வருத்தம் காரணமாகவும், ஏற்கனவே நடந்த சில நிகழ்வுகளாலும் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

Senthil Kumar
ஜூலை 31, 2025 22:47

கடைசியா அமிதாப்–க்கு கோவம் வந்துருச்சு போல.......நீங்கள் பேசாமல் தி மு க வில் சேர்ந்து விடுங்கள், அங்குதான் அதிமுக வில் இருந்து வருபவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள்.


Raghavan
ஜூலை 31, 2025 22:18

இவர் என்ன படித்திருக்கிறார். ஏதோ தப்பித்தவறி அம்மா சிறைக்கு செல்ல வேண்டி இருந்ததால் இவரை தனக்கு ஒரு அறிவீலி வேண்டும் அப்போதுதான் தான் திரும்பி வந்தாலும் பதவியை கொடுத்துவிடவேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு நம்பி முதல்வர் பதவியை கொடுத்தார். இவரும் முதல்வர் பதவியின் ருசியை அறிந்து தன்னுடைய சொத்து பத்தை எல்லாம் இழந்து கடைசியில் பழைய குருடி கதவை திறடி என்கிறசொல்லடைக்கு ஏற்ப டீ கடை தொழிலை பார்க்கப் போகிறார். சம்பாதித்ததை வைத்துக்கொண்டு நிம்மதியான வாழக்கையை வாழுவதைவிட்டுவிட்டு உஙகளுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை. உங்களுக்கு சொந்தமாகவே பேசவரது துண்டு சீட்டிலும் உள்ளதை படிக்கத்தெரியாது அப்படி இருக்க உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை.


RRR
ஜூலை 31, 2025 21:32

முதுகு குத்தி எட்டப்பாடிக்காக பாஜக இவரை கழற்றிவிட்டுள்ளது. அதன் பலன் 2026இல் தெரியும்.. அண்ணாமலை அரும்பாடுபட்டு கட்டமைத்த தமிழக பாஜக அழிவுப்பாதையில் மிக வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. அதிமுக-பாஜக கூட்டணி மண்ணைக் கவ்வுவது உறுதி. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இவர்களால் திமுக ஆட்சியை அகற்றமுடியாது.


MARUTHU PANDIAR
ஜூலை 31, 2025 20:40

கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே இந்த ஆளின் உள்ளடி வேலையை பற்றி அவுங்க ஊர் ஆட்களே விலாவாரியா பேசுனாங்கல்ல ?


தாமரை மலர்கிறது
ஜூலை 31, 2025 18:59

கொசு வெளியேறியது.


R.MURALIKRISHNAN
ஜூலை 31, 2025 17:35

இனி டிரம்புடன் மட்டுமே கூட்டணி


முருகன்
ஜூலை 31, 2025 17:27

நம்பிக்கையின் மறு உருவம் இவர் நம்பிக்கை அற்ற மனிதனுக்காக இவரை ஓரம் கட்டி விட்டார்கள்


vivek
ஜூலை 31, 2025 18:47

ஒரு இருநூறு முருகர் இப்படியெல்லாம் கம்பி கற்றார் பாருங்கோ


Apposthalan samlin
ஜூலை 31, 2025 17:22

தேவர் சமூகம் வோட்டு போச்சா ? சசிகலா ttv தினகரன் பண்ணீர்செல்வம் இணைந்து நின்றாலே கணிசமான தொகுதி கிடைக்கும் .


Anand
ஜூலை 31, 2025 19:00

ஆடு நனையுதே என ஓநாய் அழுததாம்.


V RAMASWAMY
ஜூலை 31, 2025 17:17

விநாச காலத்தில் விபரீத புத்தி.


sribalajitraders
ஜூலை 31, 2025 16:52

பாஜக வை நம்பி போனால் நடு தெருவுலதான் நிக்கணும் என்பதற்கு ops நல்ல உதாரணம்


vivek
ஜூலை 31, 2025 17:39

அறிவிலி... இதற்கு சரியான பழமொழி என்ன தெரியுமா........ யை குளிப்பாட்டி நடு வீட்ல வச்சா கூட அது தெருவுக்கு தான் போகுமாம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை