உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓபிஎஸ், தினகரனுடன் சமரசம் பேச தயார்: மதுரையில் நயினார் பேட்டி

ஓபிஎஸ், தினகரனுடன் சமரசம் பேச தயார்: மதுரையில் நயினார் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: 'ஓபிஎஸ், தினகரனுடன் சமரசம் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன்', என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் டி டி வி தினகரன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.இவர்கள் இருவரும் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீது புகார் தெரிவித்துள்ளனர்.இத்தகைய சூழ்நிலையில் மதுரையில் நயினார் நகேந்திரன் அளித்த பேட்டி:ஓபிஎஸ், தினகரனுடன் சமரசம் பேசுவதற்கு தயாராக இருக்கிறேன்.பாஜ., கூட்டணியை விட்டு தினகரன், ஓபிஎஸ் வெளியேறியதற்கு நான் பொறுப்பாக முடியாது.யாரும் வெளியேறியதற்கு நான் காரணம் அல்ல.செங்கோட்டையன் பேச்சுக்கு பின்னால் பாஜ இல்லை. யாருடைய பின்னணியிலும் தமிழக பாஜ, அகில இந்திய பாஜவும் இல்லை.அதிமுகவில் பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 07, 2025 08:54

அதிமுகவை தோண்டிப் புதைக்கும் பாஜக+திமுக கூட்டணியின் திட்டப்படி இனிமேல் அதிமுக மாஜிக்கள் மீதான கேசுகளை திமுக தூசி தட்டுமே >>>>


Farmer
செப் 07, 2025 08:20

நை நா ......இனிமே பிஜேபி கிளோஸ் தான் ....


Mecca Shivan
செப் 07, 2025 08:02

இந்த ஆளு ஒரு வேஸ்ட். அண்ணாமலையை எதிர்கொள்ளவே திட்டமில்லை.. இவர் திமுகவை எதிர்கொள்வார் என்று எப்படி பிஜேபி நம்பினார்கள். ஒருவேளை அந்த வேலையை எடப்பாடி பார்த்து கொள்வார் இவர் அவருக்கு எடுபிடியாக இருந்தால் போதும் என்று நினைத்துவிட்டனரோ


Rajasekar Jayaraman
செப் 07, 2025 07:40

அமித்ஷா மற்ற மாநில அரசியலுக்கு ok ஆனால் தமிழகத்தில் 0.


Kasimani Baskaran
செப் 07, 2025 06:41

தீம்காவுக்கு ஆதரவாக அண்ணாமலை கூட்டணியை கலைத்து விட்டார் என்று ஒரு கோஷ்டியும், எசப்பாடியின் பெருந்தன்மைதான் அவரது முன்னாள் கூட்டத்தை கூட்டணியில் இருந்து விரட்டி அடித்தது என்று வேறு கோஷ்டியும் சொல்லித்திரிகிறார்கள். பன்னீர் செல்வம் மோடியை சந்திக்க முடியாமல் செய்த சூழ்ச்சியை வைத்துப்பார்த்தால் கூட்டணி நாசமாக திராவிடமயமாக்கப்பட்ட பாஜக உதவி இருப்பது தெள்ளத்தெளிவாக புரியும். நயினார் டேமேஜ் கண்ட்ரோல் மோடில் இருக்கிறார் என்பது தெளிவாக புரிகிறது.


M Ramachandran
செப் 07, 2025 02:04

நீங்க பழனியின் பிண்ண்னி குரல்.பழனி இப்போ முருங்க மர உச்சாணி கிளையில் . புளிய மர பேய் இப்பொ முருங்க மரத்தில் குடி கொண்டிருக்கு 2026 என்ற தீ குண்டம் அடியில் இருக்கு. கிளை நிச்சயம் முறிந்து விழும் நிலையய்க்கு வந்து விட்டது. அவன் நன்மைக்கு பேயை ஒட்டி கொண்டிருக்கும் பேயோட்டி விட்டு விட்டு போன பின் அதன் காலமும் ஆட்டமும் முடிவடை போகுது.


M Ramachandran
செப் 07, 2025 01:24

இப்போர் பழைய உறவுடன் கையை கோரத்து கொண்டு ஆட்டம் போட்டு கொண்டிருக்கும் ஒரு தலை 2026 பிறகு அரசியலிலிருந்து காணாமல் போய் ஒய்வு எடுத்து கொள்ளும். ஒரு பழைய தலையெ பழைய இடத்திற்கு வந்து விடும். ஒரு நடுவில் இருக்கும் குண்டு பெருச்சாளி கானக புலியையெ காலை ஆகாரமாக கொள்ளும் திறன் உண்டு.


Vasan
செப் 06, 2025 23:26

Goat is getting wet wolf is worried.


sankar
செப் 06, 2025 22:20

நைனாரும் எடப்பாடியும்தான் ஓ பீ எஸ் தினகரன் வெளியேறுவதற்கு காரணம் . சமரசம் பேசுபவன் அதை செய்வான் . அதை விரும்பாதவர் சாராம்சம் செய்வதாக நடிப்பார் . நைனார் ஈ பீ ஸ் மனம் கோணாமல் செயல் படுகிறார்


Oviya Vijay
செப் 06, 2025 22:16

பேசுறதப் பார்த்தா மேலிடத்துல இருந்து செம டோஸ் விழுந்திருக்கு போலத் தெரியுது... எப்படியாவது தமிழ்நாட்டுல ஜெயிச்சே ஆகணும்னு ஷாவும் ஜீயும் மனக்கோட்டை கட்டிக்கிட்டு இருக்குறப்போ இப்படி மாநிலத் தலைவரே கலகம் செஞ்சிக்கிட்டு இருந்தா என்ன பண்றது...


முக்கிய வீடியோ