உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை மிக கனமழை; வானிலை மையம் தகவல்

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை மிக கனமழை; வானிலை மையம் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் நாளை சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னமானது நாளை மறுநாள் தீவிர புயலாக மாறி மாலை அல்லது இரவில் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே காக்கிநாடா பகுதியில் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0pp6mr0x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று (அக் 26) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருவள்ளூர்* சென்னை* ராணிப்பேட்டை* காஞ்சிபுரம்* செங்கல்பட்டு* வேலூர்* திருவண்ணாமலை* விழுப்புரம்* கள்ளக்குறிச்சி* கடலூர்* மயிலாடுதுறைநாளை (அக் 27) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருவள்ளூர்* சென்னை* ராணிப்பேட்டை* காஞ்சிபுரம்நாளை (அக் 27) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* செங்கல்பட்டு* விழுப்புரம்நாளை மறுநாள் (அக் 28) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* திருவள்ளூர்நாளை மறுநாள் (அக் 28) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* ராணிப்பேட்டை* சென்னை* காஞ்சிபுரம்* செங்கல்பட்டு* தென்காசி* திருநெல்வேலி* கன்னியாகுமரி இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Vasan
அக் 26, 2025 20:32

காலை 8.30 முதல், இரவு 8.30 வரை, சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு துளி மழை இல்லை. துல்லியமான கணிப்புக்கு நன்றி.


வாய்மையே வெல்லும்
அக் 26, 2025 16:25

பெருமழை வெள்ளத்திற்கு மத்திய அரசே காரணம் என கோமாளிகள் கூப்பாடு போடாத வரைக்கும் நல்லது. அதையும் செய்து பார்த்து மத்திய அரசு நிவாரணம் கொடுக்கவில்லை என கூப்பாடு போடும் பலே கேடிகுரூப்பு இப்போ திரைக்கதை வசனம் எழுதிட்டு இருக்கும்.


sundarsvpr
அக் 26, 2025 16:01

மழை பெய்வது இருக்கட்டும். இதன் தாக்கத்தை கட்டுப்படுத்த நாம் செய்த தர்மங்கள்தான் காப்பாற்றும். அரசு வழங்கும் இலவசங்களை தகுதி அற்றவர்கள் முந்தி அடுத்து முதலில் பெறுகிறார்கள். இதனை அரசு அறிந்தும் பதவி ஆசையில் கண்டும் காணாமல் உள்ளது. பகவான் ராமன் அரக்கன் ராவணனை அழிக்க 14 ஆண்டுகள் கால்நடையாய் அலைந்தார். இதுபோல் மக்களும் கஷடப்படவேண்டும் என்பது தலை விதி. தர்மம் நிச்சியம் வெல்லும்


Govi
அக் 26, 2025 14:05

No யூஸ்


புதிய வீடியோ