இருக்கை வசதி செய்து தர உத்தரவு
சார்-பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ள உத்தரவு: தமிழகத்தில், 587 சார்-பதிவாளர் அலுவலகங்களில், பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பெரும்பாலான அலுவலகங்களில், அலுவலர்களை சந்திக்க வருவோர், நிற்க வேண்டி இருப்பதாக புகார் வந்துள்ளது. பொதுமக்களை நாற்காலியில் அமர வைத்து பேச வேண்டும். எந்த காரணமாக இருந்தாலும், நிற்க வைத்து பதில் அளிக்கக்கூடாது. எனவே, சார்-பதிவாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர் ஆகியோரின் மேஜை எதிரில், குறைந்தபட்சம் தலா இரண்டு நாற்காலிகள் போட வேண்டும். இதைச் செய்ய தவறினால், கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.