உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்டர் செய்ததோ மொபைல் போன்: பார்சலில் வந்ததோ சென்ட் பாட்டில்: அமேசான் மீது போலீசில் புகார்

ஆர்டர் செய்ததோ மொபைல் போன்: பார்சலில் வந்ததோ சென்ட் பாட்டில்: அமேசான் மீது போலீசில் புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அமேசான்' செயலி வாயிலாக, 35,000 ரூபாய் செலுத்தி, மொபைல் போன் ஆர்டர் செய்த தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, சென்ட் பாட்டில் அனுப்பியதுடன், அவருக்கு மிரட்டல் விடுத்த நபர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், நந்தவன மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 26; தனியார் நிறுவன ஊழியர். இவர், டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த, 11ம் தேதி, 'அமேசான்' செயலி வாயிலாக, 'விவோ வி50' என்ற '5ஜி' மொபைல் போன் வாங்க, 'ஆர்டர்' செய்தேன். இதற்கு, 'ஆன்லைன்' வாயிலாக, 35,000 ரூபாய் செலுத்தினேன்.கடந்த, 16ம் தேதி நான் வேலை செய்யும் நிறுவன முகவரிக்கு, அமேசான் நிறுவன டெலிவரி ஊழியர் மோகன் என்பவர் வந்தார். மொபைல் போன் வந்து இருப்பதாகக் கூறி, பார்சலை கொடுத்தார். அவர் கண்முன் பார்சலை பிரித்துப் பார்த்தேன். அதில், மொபைல் போனுக்கு பதிலாக, 'சென்ட் பாட்டில்' இருந்தது. இதனால், நான் வாங்க மறுத்து, திருப்பி எடுத்துச் செல்லுமாறு கூறினேன்.அவரோ, 'உங்கள் பெயரில் இந்த பார்சல்தான் வந்துள்ளது. புகார் தெரிவிக்க வேண்டுமானால், எங்கள் நிறுவன அதிகாரி சரவணனிடம் பேசுங்கள்' என கூறி விட்டார். அவரது மொபைல் போன் எண்ணையும் கொடுத்தார். அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது, 'பார்சல் மாறி வந்திருக்கலாம். மொபைல் போனை அனுப்பி வைக்கிறோம்' என்று கூறினார்.அவர் சொன்னபடி பார்சல் வரவில்லை. இதனால், அமேசான் செயலி வாயிலாக புகார் பதிவு செய்தேன். அதன்பின், அமேசான் நிறுவன அதிகாரி ஒருவர் தொடர்பு கொண்டு, 'எங்களால் ஒன்றும் செய்ய முடியாது' என, கூறிவிட்டார். போலீசில் புகார் அளிப்பதாகக் கூறியதும், கோபம்அடைந்த அவர், என்னை ஆபாசமாக திட்டினார். 'உன்னால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது' என்றும் மிரட்டினார்.என் புகார் மீது, அமேசான் நிறுவனம் எவ்வித பதிலும் தெரிவிக்காமல் மிரட்டல் விடுத்து வருகிறது. என்னை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்த, அமேசான் நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, என் பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramaswamy Jayaraman
ஜூன் 26, 2025 14:49

இது போன்ற தவறுகள் அமேசான் இந்தியாவில் மட்டும் தான் அதிகமாக நடக்கிறது, இதற்கு அமேசான் மட்டும் பொறுப்பாளியல்ல. பொருள் விற்கும் கம்பெனியும் பொறுப்பு. உடைந்த சாமான் பார்ஸலில் வருவது சகஜம். அதுவும் கம்பெனியின் பாக்கிங்கில். வெளியில் அமேசான் பேக்கிங். இந்தியாவில்தான் ஆன்லைன் தவறுகள் அதிகம். இந்த மாதிரி வியாபாரம் செய்பவர்கள் தூகலாம். அடுத்தவனை ஏமாற்றி வியாபாரம் எரிவதை விட.


Ramesh Sargam
ஜூன் 26, 2025 12:37

இதிலிருந்து மக்கள் ஒன்று கற்றுக்கொள்ளவேண்டும். இனியும் இதுபோன்று ஏமாறாமல் இருக்க நேராகவே பொருள்கள் விற்கும் கடைக்கு சென்று பொருட்களை வாங்கவும். எதற்காக ஆன்லைனில் வாங்குகிறீர்கள்? ஆன்லைனில் வாங்கினால் ஏதோ பெரிய மனிதர் என்கிற நினைப்பா? ஸ்டேட்டஸ் கூடிவிடும் என்கிற நினைப்பா?


vbs manian
ஜூன் 26, 2025 11:46

பலமுறை நடந்துள்ளது.


சசி, செங்கல்பட்டு
ஜூன் 26, 2025 10:35

உள்ளூரில் ஆயிரம் கடைகள் இருக்கும் போது ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குவது ஏனோ


Rajasekaran K
ஜூன் 26, 2025 10:03

அமேசன் ஆர்டரில் பிரச்சினை என்றால் அமேசான் நிறுவனத்தை ஆன்லைன்ல தொடர்பு கொண்டு ஆர்டர் நம்பர் & பொருளின் புகைப்படத்தை அனுப்பினாலே போதுமே. நீங்கள் எதற்கு டெலிவரி பண்ணிய நபர்களிடம் கேட்டீர்கள், பெரும்பாலும் டெலிவரி பண்ணும் ஆட்களுக்கு இதுபோல பிரச்சினைகளை கையாள தெரியாது இவர்களுக்கு பெரும்பாலும் அனுமதியும் கிடையாது. எனக்கு நிறைய முறை இப்படி பொருட்கள் மாறுபட்டுள்ளது புகார் கொடுத்தால் அடுத்த ஒருவாரத்துக்குள் மீண்டும் சரியாக அனுப்பிவிடுவார்கள். நான் ஆன்லைன்ல எந்த பொருள் வாங்கினாலும் பேக்கேஜ் பிரிப்பதை போட்டோ/ வீடியோ எடுப்பேன்.


T. சங்கரநாராயணன் ஈரோடு
ஜூன் 26, 2025 09:35

use cash on delivery option, why you pay in advance?


Kalyanaraman
ஜூன் 26, 2025 09:12

இதுவே லண்டனிலோ, ஏன் சின்ன நாடான மலேசியாவில் நடந்திருந்தாலோ நிறுவனங்களுக்கு கடும் அபராதம் இருக்கும். ஆனால், இந்தியாவில் இந்தியர்களோ இந்த முதுகெலும்பற்ற ஆண்மையற்ற சட்டங்களை வைத்துக்கொண்டு படாத பாடு படுகிறோம். யார் செய்தாலும் சரி, தண்டனை குறைவு என்பதால் தான் இப்படிப்பட்ட குற்றங்கள் அடிக்கடி நிகழ்கிறது.


தஞ்சை மன்னர்
ஜூன் 26, 2025 11:01

எனக்கு என்னமோ இந்த பையன் மீதுதான் சந்தேகமாக இருக்கு தவறான வார்த்தை பிரயோகம் மூலமாக நடந்து இருப்பது போல இருக்கு எடுத்தவுடன் இதுபோலவெல்லாம் அதில் நடக்க வாய்ப்பே இல்லை மிரட்டியதாக சொல்லும் தகவலில் உண்மை இருக்க வாய்ப்பு இல்லை மேலும் இந்த பிரச்சினை தனிப்பட்ட முறையில் இருவருக்கும் இடையில் நடந்த ஆபாச சம்பாஷணையை நிர்வாகத்தை இழுக்க வேண்டிய அவசியம் இல்லை


முக்கிய வீடியோ