உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்களுடைய கூட்டணி இறுதியானது; உடைக்க நினைப்பது நடக்காது: நயினார் நாகேந்திரன் பேட்டி

எங்களுடைய கூட்டணி இறுதியானது; உடைக்க நினைப்பது நடக்காது: நயினார் நாகேந்திரன் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''எங்களுடைய கூட்டணி இறுதியானது. கூட்டணி உடைக்க நினைக்கும் முயற்சி நடக்காது'' என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட கூட்டத்தை, பார்த்து எங்களது பலத்தை தெரிந்து கொண்டால் சரி. முதல்வர் ஸ்டாலின் காஸ் சிலிண்டர் விலையை குறைப்பாரா? குறைப்பேன் என்று சொல்லி, 4 ஆண்டுகள் ஆகி உள்ளது. டீசல், பெட்ரோல் விலையை குறைப்பேன் என்று சொன்னார்கள். டீசல் விலையை மற்றும் கொஞ்சம் குறைத்தார்கள். ஆனால் பெட்ரோல் விலையை குறைக்கவில்லை. கட்சி பணிகள் தொடர்பாக, நாங்கள் ஆலோசனை நடத்தியது எல்லாம் பற்றி சொல்ல முடியாது.

இறுதியானது

எங்களுடைய கூட்டணி இறுதியானது. உறுதியானது. பா.ஜ., கூட்டணியை உடைப்பதற்கான முயற்சி நிறைவேறாது. தமிழகத்தில் பா.ஜ, கூட்டணியை உடைக்கும் முயற்சி நடக்கிறது. மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டை ஹிந்து முன்னணி நடத்தியது. அதில் நாங்கள் கலந்து கொண்டோம். என்னிடம் கேட்கும் கேள்விகளை எல்லாம் முதல்வரிடம் கேளுங்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க சென்ற கர்ப்பிணி பெண் தாக்கப்பட்டு உள்ளார்.

புதிய திருப்பம்

மதுரையில் நடந்த மாநாடு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சரை பார்த்து ஆ.ராசா தகாத வார்த்தையால் பேசியுள்ளார். நான் முதல்வர் ஸ்டாலினை மதிப்பிற்குரிய முதல்வர் என்று ஏன் சொல்கிறேன். அவர் எனக்கு முதல்வர் என்ற முறையில் மரியாதை உடன் பேசுகிறேன். தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரம் பற்றி பேசும் முதல்வர் ஸ்டாலின் தகாத வார்த்தையால் பேச, ஆ.ராசாவை அனுமதிக்கிறாரா?

வரவேற்போம்

எப்போதும் ஒரு கட்சி வெற்றி பெற போகிறது என்றால் அதன் பக்கம் எல்லோரும் வந்து கொண்டு இருப்பார்கள். அதனால் யார் எங்களது கட்சிக்கு வந்தாலும் வரவேற்போம். ஹிந்து மதத்தில் என்ன பாகுபாடு இருக்கிறது. பாகுபாடு என்பது எங்கும் கிடையாது. ஹிந்து என்பது ஒரு வாழ்வியல் முறை. இவர்கள் மாதிரி ஒரு சமுதாயத்திற்கு ஆதரவாகவும், மற்றொரு சமுதாயத்திற்கு எதிராகவும் பேசி, சந்தர்பவத்தை பயன்படுத்தும் சந்தர்பவாதிகள் எங்களிடம் யாரும் கிடையாது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Thravisham
ஜூன் 27, 2025 07:09

நயினா நீ எல்லாம் கெஞ்ச வேண்டியதில்லை, அண்ணாமலை போன்ற தலைவன் இருக்கும் போது. வெண்ணையை வைத்து கொண்டு நெய்க்கு அலைகிறாய்


புரொடஸ்டர்
ஜூன் 26, 2025 09:03

பாஜக கூட்டணி கட்சி ஒவ்வொன்றும் தேர்தலுக்கு பிறகு தானாக உடைந்துவிடும் நயினார் நாகேந்திரன்.


ராஜா
ஜூன் 26, 2025 05:12

ஆடு நனையுதே என்று ஓநாய் அழுதது என்ற கதை நினைவுக்கு வருகிறது.


திகழ்ஓவியன்
ஜூன் 25, 2025 22:42

அயோத்திராமர் கோவிலை வைத்து அரசியல் பண்ணினீர்கள் .நாடாளுமன்ற தேர்தலில் .அயோத்தி தொகுதி தோல்வி . மதுரையில் முருகனை வைத்து அரசியல் செய்கிறீர்கள் . இது கூடவா கடவுள் முருகனுக்கு தெரியாது .உண்மையான பக்திக்கும் அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாதவரா முருக கடவுள் . வரும் தேர்தலில் அங்கும் உங்கள் கூட்டணி படு தோல்வி அடையத்தான் போகிறது .


Barakat Ali
ஜூன் 25, 2025 21:17

இதை தினமும் பத்து முறை சொல்றதுதான் டவுட்டா கீது வாத்தியாரே ........


Raj S
ஜூன் 25, 2025 19:55

திருட்டு திராவிட கோபாலபுர கொத்தடிமை கும்பலின் புலம்பலை பார்க்கும்போது ஆனந்தமா இருக்கு ஹா ஹா ஹா


madhesh varan
ஜூன் 25, 2025 18:23

இனிமேல் தினமும் காலைல எழுந்திரிச்சு நைனார் இப்படியே புலம்பனும்.


Kumar Kumzi
ஜூன் 25, 2025 19:14

ஓசிகோட்டருக்காக ஊளையிடும் கொத்தடிமை ...இன்பநிதிக்கும் நீ தான் போஸ்டர் ஒட்டணும்...


vivek
ஜூன் 25, 2025 17:54

புலம்பல் போதும்...அங்கே விசிக விற்கு டீ, பண் வேண்டாமாம்....


என்னத்த சொல்ல
ஜூன் 25, 2025 17:54

உங்க கூட்டணியை இன்னொருவர் உடைக்க வேண்டியதில்லை. நீங்களே உடைத்து விடுவீர்கள்.


Narayanan Muthu
ஜூன் 25, 2025 19:30

ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது. நுணலும் தன் வாயால் கெடும் என்பதை போல் ஒரு சில அரைவேக்காடுகளின் தான் தோன்றி தனமான பேச்சால் தானாகவே உடைந்து விடும் வேறு யாரும் உடைக்க முயற்சிக்க கூட வேண்டாம்.


Raja
ஜூன் 25, 2025 17:35

அண்ணாமலை என்ற திமுக ஆதரவு கட்சிக்குள் வைத்துக்கொண்டு திரு.நைனார் நாகேந்திரன் இப்படி கூறுவது வேடிக்கையாக உள்ளது. இந்த கூட்டணியை உடைத்து, திமுக வெற்றிபெற ஓயாமல் பாடுபடும் அண்ணாமலயை கட்சியிலிருந்து நீக்கினால்தான் இந்த கூட்டணி நிலைக்கும்.. வெற்றி பெறும்.


Kumar Kumzi
ஜூன் 25, 2025 19:18

யார்ர்ரா நீ புச்சா இருக்க


vivek
ஜூன் 26, 2025 06:11

புதிய போலி சொம்பு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை