UPDATED : ஏப் 11, 2025 08:09 AM |  ADDED : ஏப் 10, 2025 10:35 PM 
                            
                            
                         
                         
                     
                        
                              
                           
                        
                          
                                                      
கோவை: அ.தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணைச் செயலாளரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளருமான சந்திரசேகர் ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணைச் செயலாளரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளராக இருப்பவர் இன்ஜினியர் சந்திரசேகர். முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர். வேலுமணி வீட்டில் ரெய்டு நடக்கும்போதெல்லாம் சந்திரசேகர் வீட்டிலும் ரெய்டு நடக்கும்; அந்த அளவுக்கு இருவரும் நெருக்கம். சந்திரசேகர் மனைவி ஷர்மிளா கோவை மாநகராட்சியில் 38 வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலராக இருக்கிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vor6aaaf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் அ.தி.மு.க.,வில் இருந்து விலகுவதாக சந்திரசேகர் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட கடிதத்தில், ' தனிப்பட்ட பணி காரணமாக தொடர்ந்து கட்சிப் பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத சூழல் இருக்கிறது. எனவே, கட்சியின் அனைத்து வித பொறுப்புகளில்  இருந்தும் என்னை முழுமையாக விடுவித்துக் கொள்கிறேன் ' எனக்கூறியுள்ளார்.சமூக வலைத்தளங்களில் தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்ட சந்திரசேகர், மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். இது தொடர்பாக கருத்தை அறிய அவரது மனைவியும், மாநகராட்சி கவுன்சிலருமான ஷர்மிளாவை செய்தியாளர்கள் தொடர்பு கொண்ட போதும் அவர் பதில் அளிக்கவில்லை.