உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் லஞ்சத்தின் சங்கிலித் தொடர் பின்னணி அறிந்து கொள்ள வேண்டாமா; அமலாக்கத்துறை தரப்பில் ஐகோர்ட்டில் வாதம்

டாஸ்மாக் லஞ்சத்தின் சங்கிலித் தொடர் பின்னணி அறிந்து கொள்ள வேண்டாமா; அமலாக்கத்துறை தரப்பில் ஐகோர்ட்டில் வாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக சோதனையில் தெரிய வந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், கடந்த மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானது என, அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xeh1c05f&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவற்றின் மீதான இறுதி விசாரணை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது, 'மாநில அரசின் அனுமதி இல்லாமல், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய முடியாது. எந்த வழக்கின் அடிப்படையில், சோதனை நடத்தப்பட்டது என்பதை, அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை. முதல் தகவல் அறிக்கைகள் விபரங்கள் இல்லாமல், வாதங்களை முன் வைப்பது என்பது இயலாத காரியம்,' என டாஸ்மாக் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த நிலையில், 4வது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது. அப்போது, அமலாக்கத்துறை வாதம் தொடங்கியது. டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக சோதனையில் தெரிய வந்துள்ளது. டாஸ்மாக் ஊழியர் லஞ்சம் வாங்கினால், அதன் சங்கிலி பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களும் தலைமை அலுவலகத்தில் உள்ளன, என தெரிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் வாதத்தை தொடர்ந்து வழக்கு விசாரணை நாளைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Ethiraj
ஏப் 20, 2025 07:12

Any goods which attracts taxes billing has to be done same day and time if sale to prevent tax evasion. This basic knowledge is known to all officials of TASMAC If this is done by any private company they would have been punished


Kasimani Baskaran
ஏப் 17, 2025 04:11

பாற்கடலை கடைவது எளிது. டாஸ்மாக் ஊழல் கடலை கடைய மிகப்பெரிய தடைகள் வரும்.


Thetamilan
ஏப் 16, 2025 23:01

நாட்டில் தினமும் பல லட்சம் கோடிகள் கொள்ளையடிக்கப்படும்போது அமலாக்கத்துறை ஆயிரம் கோடிக்காக டெல்லியிலிருந்து வரிந்துகொட்டிக்கொண்டு இங்கு கொட்டமிடுவது ஏன் ?


chandra sekaran
ஏப் 17, 2025 12:00

நீங்க சொல்லும் பல லட்சம் கோடி இங்கு தானே நடக்குது


chandra sekaran
ஏப் 17, 2025 12:01

பல லட்சம் கோடி இங்கு தானே நடக்குது


sankaranarayanan
ஏப் 16, 2025 21:11

டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக சோதனையில் தெரிய வந்துள்ளதாக அமலாக்கத்துறை சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கிட்டுமா உயர்நீதி மன்றம் இப்படி பேசுகிறது உள்ளங்கை நெல்லிக்கனி என்றாற்போல டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது அது என்ன என்று முழு விசாரணைக்கு ஆணையிடாமல் உப்பு சப்பு இல்லாமல் அந்த கூற்றை நிராகரிப்பது ஊழலை வலர்க்கும் முறையாகும் பிறகு இது டில்லியில் நடந்தாற்போலாகிவிடும்


Raman
ஏப் 16, 2025 20:09

Hopefully the corrupt must be punished. People are watching very carefully.


Balakrishnan karuppannan
ஏப் 16, 2025 19:21

எல்லாம் கண் துடைப்பு....


Shankar
ஏப் 16, 2025 19:18

சிபிஐ என்ன பாகிஸ்தான் நாட்டு உள்துறையை சேர்ந்ததா? நம்நாட்டின் புலனாய்வு அமைப்பு தானே. அதற்கு எதற்காக மாநில அரசின் அனுமதி தேவை? முதலில் மாற்றவேண்டியது நம்நாட்டின் பழைய சட்டங்களை.


swega
ஏப் 17, 2025 11:16

நமது காங்கிரஸ் அரசு சிபிஐயை டெல்லி காவல் சட்டத்தின் கீழ் ஆரம்பித்தது. அது தான் இந்த மாநில அரசுகளால் குழப்பத்தை உண்டாக்க முடிகிறது. மத்திய அரசு இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்


sankaranarayanan
ஏப் 16, 2025 19:15

மாநில அரசின் அனுமதி இல்லாமல், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்ய முடியாது. எந்த வழக்கின் அடிப்படையில், சோதனை நடத்தப்பட்டது என்பதை, அமலாக்கத்துறை தெரிவிக்கவில்லை. அப்படியானால் எந்த மாநிலம் ஊழல்கள் மலிந்து கிடைக்கும்போது தங்கள் மாநிலத்தில் அமலாகாத்துறை சி.பி.ஐ. ரைடு செய்ய அனுமதி கொடுக்கும் இதுபோன்ற வாதங்களை உயர் நீதி மன்றமோ அல்லது உச்சநீதி மன்றமோ சொன்னால் பிறகு அமகாலாக்கத்துறையில் நடந்த - நடக்கின்ற ஊழலை கண்டுபிடிக்கவே முடியாது நீதி மன்றங்களே அவர்களுக்கு துணை போவதுபோலத்தான் ஆகிவிடும் ஊழல்கள் மலின்துவிடும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 16, 2025 18:45

அமலாக்கம் பேரை இழுக்காம இந்த வழக்கை நடத்த முடியாது .... ஆனா அவரு பேரை இழுத்தா திராவிட மாடல் ஆதரவு கோர்ட்டுகளுக்கு சுர்ருன்னு கோபம் வந்துரும் ....... ம்ம்ம்ம் .... என்ன நடக்கப் போவுதுன்னு பார்ப்போம் ......


மீனவ நண்பன்
ஏப் 16, 2025 18:39

கபில் சிபல் அபிஷேக் மற்றும் வில்சன் வக்ப் வழக்கில் பிசியாக இருப்பதால் R S பாரதி மற்றும் வண்டு முருகன் தான் இந்த வழக்கில் வாதம் செய்வார்கள்


சமீபத்திய செய்தி