உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.3 ஆயிரம் கோடி வக்ப் சொத்து வைத்திருக்கும் ஓவைசி; தமிழ் மாநில முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு

ரூ.3 ஆயிரம் கோடி வக்ப் சொத்து வைத்திருக்கும் ஓவைசி; தமிழ் மாநில முஸ்லிம் லீக் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''வக்ப் வாரியத்துக்கு சொந்தமான ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருக்கும் தெலுங்கானா எம்.பி., ஓவைசி, தெலுங்குப்படங்களில் வரும் காட்சிகளை போல, பார்லிமென்டில் நடிக்கிறார்,'' என்று, தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் கூறினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a1tpc66o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து ஷேக் தாவூத் கூறியதாவது: வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை தமிழ் மாநில முஸ்லிம் லீக் முழுமையாக வரவேற்கிறது. அதில் 5 ஆண்டுகளுக்கு, ஒரு இஸ்லாமியராக வேற்று மதத்தில் இருந்து மாறினால், முதலில் அவர்கள் சொல்வது, 5 ஆண்டுகள் இஸ்லாமிய நடை முறைகளை கடைப்பிடித்து இருந்தால் தன்னுடைய சொத்தை வக்ப் வாரியத்திற்கு எழுதலாம் என சொல்கிறார்கள். இந்த சட்டம் முழுமையாக நமது கைக்கு வரவில்லை, முழுமையாக வந்தால் தான் முழு விபரம் தெரிய வரும். தன் பெயரில் இல்லாத சொத்தை வக்ப் வாரியத்திற்கு எழுத முடியாது என சொல்கிறார்கள். வக்ப் வாரியத்தில் பெண்கள் இருவரை உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்கிறார்கள். வக்ப் வாரியத்திற்கு எழுதி வைத்த சொத்துகள் விபரத்தை 90 நாட்களில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என சொல்கிறார்கள்.இதுவரைக்கும் பார்த்தால் யார் வக்ப் வாரியத்திற்கு சொத்துக்கள் எழுதி வைத்து இருக்கிறார்கள் என்பது தெரியாது. பெரிய மர்மமாக இருக்கிறது. அண்ணா அறிவாலயம் வக்ப் வாரியத்திற்கு உரியது. தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கிரவுண்ட் வக்ப் வாரியத்திற்கு கீழ் வருகிறது. திருச்சியில் இருக்கும் அறிவாலயம், தி.மு.க., கட்டி இருப்பது வக்ப் வாரியத்திற்கு சொத்தமானது என்று நம் எல்லோருக்கும் தெரியும். கொஞ்சம் நாட்களுக்கு முன் தான் எல்லாம் பக்காவா தெரியவந்தது.நாட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு மேல் வக்ப் வாரியத்துக்கு சொத்துக்கள் உள்ளன. இவற்றில் 10 சதவீதம் வருமானம் வந்தால் கூட, ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வர வேண்டும்.இந்த சொத்துக்களை யார் வைத்திருக்கின்றனர், யார் அந்த வருமானத்தை அனுபவிக்கின்றனர் என்று வெள்ளை அறிக்கை வேண்டும். வக்ப் சொத்துக்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி சம்பாதித்த சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

ஓவைசியிடம் ரூ.3 ஆயிரம் கோடி

இந்த சட்டத்தை இஸ்லாமியர்கள் நிறைய பேர் எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒரு குறிப்பாக சொல்கிறேன். ஓவைசி ஒருத்தர் என்று ஹைதராபாத் காரர் இருக்கிறார். உங்களுக்கு எல்லாம் தெரியும். அவர் எம்.பி.,யாக இருக்கிறார். அவர் சொல்கிறார் என் நெஞ்சில் சுடுங்கள், இப்பொழுதே சுடுங்கள். அவர் தெலுங்கில் இருந்து முஸ்லீமாக மாறியவர். அவர் கொடுக்கும் ஆக்ஷன், நடிப்பு எல்லாம் பார்க்கும் போது, தெலுங்கு படத்தை நான் பார்த்த மாதிரி இருக்கிறது. பார்லிமென்டில் யாராவது துப்பாக்கி கொண்டு வந்து சுடுவார்களா? பேசி முடித்து விட்டு, வெளியே வந்து பி.ஜே.பி., ஆட்களோடு ஒன்னா உட்கார்ந்து டீ, காபி சாப்பிட்டுவிட்டு பாய், பாய் என்கிறார். அவர் வக்ப் வாரியத்திற்கு சொந்தமான ரூ.3 ஆயிரம் கோடி சொத்தை வைத்து இருப்பதாக தகவல் இருக்கிறது. அவர் பெயரில் நிறைய ஹோட்டல், கல்லூரி இருக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.மேலும், தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் ஷேக் தாவூத் பேட்டியை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்யை கிளிக் செய்யவும்https://www.youtube.com/watch?v=A9M1xRVNr0w


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

venkateshan G A
ஏப் 07, 2025 22:40

இந்த மாமா மோடிக்கு கைதளம் பற்றி கனா காண்கிறார். சென்றமுறை இவரது தோல்வி மோடியுடன் கூட்டணி வைத்தது தான் காரணம் மென்றார். ஊமை கனக்கண்டால் யாரிடமூம் சொல்லக்கூடாது யென்பதை நினைவுப்படுத்கிறார்.


Bhaskaran
ஏப் 07, 2025 21:30

காங்கிரஸ் கிரவுண்ட் வக்ஃப் சொத்தா இதென்ன புதுக்கதை.காமராசர் காங்கிரஸ் தலைவராக இருந்த போது கட்சிக்கு நன்கொடையாக உண்டியல் குலுக்கி வசூல் செய்த சொல்ப பணத்தை அவ்வப்போது அந்த சமயம் தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளராக இருந்த ஹிந்து பத்திரிக்கை அதிபர் கஸ்தூரி ஸ்ரீனிவாசனிடம் கொடுத்து வந்தார் ஒருமுறை அவருக்கு உடல்நலம் சரியில்லாமல்போக அவர் காமராசரை அழைத்து அவர் தன்னிடம் தந்துள்ள பணத்தை நாள் வாரியாக கணக்கு எழுதிவைத்த நோட்டு டன் கொடுக்க வந்த சமயத்தில் அதெல்லாம் பின்னாடி பார்த்துக்கொள்ளலாம் முதலில் உங்கள் உடல் நிலை சரியாகப் கும் என்று சொல்லிவிட்டார்.கொஞாச காலம் கழித்து தமிழ்நாடு காங்கிரசுக்கு ஒரு நிலையான வருமானம் வரவேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் காங்கிரஸ் கிரவுண்ட் தாக இப்போது இருக்கும் பெரிய இடம் ஓரு மகாராஜாவின் உடையதாக இருந்ததாம் அது விலைக்கு வருவதாக கேள்விப்பட்டு தன் பணம் 30000 ரூபாய் மேலே போட்டு இந்த இடத்தை காங்கிரசுக்கு வாங்கி கொடுத்தவர் கஸ்தூரி ஸ்ரீனிவாசன்.இதுதற்போதைய காங்கிரஸ்காரர்களுக்கு தெரியுமா .இதில் வேடிக்கை என்ன‌வென்றால் போபர்ஸ் ஊழல் விவகாரத்தில் இந்து நாளிதழ் வெளியிட்ட தகவல்களுக்காக அந்த அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் காங்கிரஸ்காரர்கள்.எனது நாடக வாழ்க்கை என்ற நூலில் அவ்வை ஷண்முகம் எழுதியுள்ள ஒரு விஷயம்.தமிழ்நாடு காங்கிரசுக்காக அவ்வை ஷண்முகம் சகோதரர்கள் பல நாடகங்களை காசு வாங்காமல் நடித்து அதன் வருவாயை கட்சிக்கு தந்தார்கள் இதெல்லாம் காங்கிரஸ்காரர்கள் உனக்கு நினைவிரூக்கிறதா என்று எழுதியுள்ளார்


MUTHU
ஏப் 07, 2025 21:27

இன்றைய இந்திய வரலாறு என்பது ஆங்கிலேயர்களை பற்றி மிகைப்படுத்தப்பட்ட கொடுமைகளும் இஸ்லாமிய மன்னர்கள் செய்த கொடுமைகளின் மறைப்புகளுமே அதிகம். தற்போதைய ஆட்சியாளர்கள் என்ன நினைக்கின்றனர். இஸ்லாமிய மன்னர்கள் மதத்தினை முன்னிறுத்தி செய்த கொடுமைகள் உண்மைகள் வெளிப்பட்டால் மக்களின் வெறுப்புணர்வு கூடிவிடும் என்று நினைக்கின்றனர். அதனால் அவர்களின் வரலாறுகளில் அக்பரை பற்றி பெருமையாய் கூறி மற்றவர்களின் கொடுமைகளை மறைத்து விடுகின்றனர். ஆனால் ஆங்கிலேயர்களை பற்றி என்ன மிகை கூறினாலும் எதுவும் நடக்கப்போவதில்லை. அதனால் வசை உண்மைகளை மறைத்து வசை பாடுகின்றனர்.


Nachiar
ஏப் 07, 2025 20:17

இந்துக்கள் தமக்கென்றொரு வாக்கு வங்கியை நிறுவும் வரை அவர்களுக்கு உலகத்தில் எந்த ஒரு நாட்டினுள்ளும் எதுவும் சொந்தமில்லை. கோயிலும் சொந்தமில்லை சட்டமும் பாதுகாப்பில்லை . உங்கள் முழு சுந்தந்திரத்திற்கு நீங்கள் கொடுக்கும் விலை ஒருமித்த வாக்கு மட்டுமே. ஜய் ஹிந்


தமிழ்வேள்
ஏப் 07, 2025 20:13

உண்மையில் தமிழகத்தில் உள்ள 66000த்து சொச்சம் வக்பு வாரிய சொத்துக்களில் பெரும்பான்மையானவை திராவிட பினாமிகளின் ஆதீனத்தில் இருக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.. இந்த சட்டத்தின் படி நோண்டினால் வக்பு வாரியம் சொத்து எங்கள் பெயரில் உள்ளதாக கூறப்படுகிறது.. ஆனால் அவை எங்கள் அனுபோகத்தில் இல்லை என்று கூறி இரண்டு திருட்டு திராவிட கும்பல்கள் காங்கிரஸ் கும்பல்களை கைகாட்டி விடும் வாய்ப்பு மிக அதிகம் உள்ளது.... இல்லாவிட்டால் காங்கிரஸ் இரண்டு திருட்டு திராவிட கும்பல்கள் தன்னிச்சையாக கதற காரணம் இல்லை....


Rasheel
ஏப் 07, 2025 19:53

கல்வி அறிவு இல்லாததால் அந்த சமூகத்தினர் பலர் ஏமாற்றபடுகிறார்கள். பல லக்ஷம் கோடி நல்ல வழியிலும் பல சொத்து பறிப்பு வகையிலும் வந்த போதும் ஏன் அவர்கள் கல்வி அறிவு பெற வில்லை என்பது கேள்விக்குறி.


Sivagiri
ஏப் 07, 2025 19:50

பார்லிமெண்டும் , உச்ச கோர்ட்டும் , வாகஃ சொத்துன்னு ஏற்கனவே சொல்லிட்டாங்க , வங்காளவிரிகுடா அரபிக்கடல் இந்திய பெருங்கடல் தவிர , மற்றும் கோபாலபுரம் , தவிர , எல்லாம் வக்ப் சொத்துக்கள்தான் , ஆரங்கசீப் என்ற விசுவாசி எழுதி வச்சிட்டாரு , . . .


Nachiar
ஏப் 07, 2025 19:35

என் தலையும் வக்ப் இட்கு சொந்தம். எப்போ முழுமையான சுதந்திரம் இந்தியாவிட்கு வருமோ அப்போ என் தலை எனக்கு சொந்தம்.


GMM
ஏப் 07, 2025 18:58

அண்ணா அறிவாலயம் வக்புக்கு உரியது என்றால் , பஞ்சமி நில உரிமையாளர் வளவனுக்கு இல்லையா. ? சுருக்கமாக அறிவாலயம் ஆக்கிரமிப்பு நிலம். திமுகவிற்கு உரியது அல்ல. ? வக்பு திருத்தம் மதம் மாறி தவிக்கும் இஸ்லாமிய ஏழையின் பங்கை பிரித்து தரும். திமுக வழக்கு தொடர்ந்தால், இஸ்லாமியர் , கிருத்துவர் வாக்கு பெருமளவு இழக்கும். நிலம் உரிமை பிறப்புரிமை, குடியுரிமை போன்றது


Rajathi Rajan
ஏப் 07, 2025 18:36

இங்க கருத்து சொல்லி ருக்கும் சங்கிகளு க்கு வக்ப் வாரியம் பற்றி என்ன தெரியும், ஒரு வரலாறும் தெரியாம இங்க வந்து வன்மத்தை அக்குதுக சங்கிகள்?


Keshavan.J
ஏப் 07, 2025 21:56

உனக்கு என்ன மாணா தெரியும் கொஞ்சம் சொல்லுங்கோ. உண்மையான பெயரில் வரவும். நீ பொங்கும் போதே தெரியுது நீ யார் என்று


Mettai* Tamil
ஏப் 08, 2025 10:10

ரொம்ப பொங்காம அந்த வரலாறு சொன்னா தெரிஞ்சுக்கிறோம் .....


Rajathi Rajan
ஏப் 08, 2025 11:17

உனக்கு என்ன தெரியுமோ சொத்தை பற்றி?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை