உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முகவரி இல்லை என 66 லட்சத்து 44 ஆயிரம் பேர் நீக்கம் பெரிய மோசடி; ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

முகவரி இல்லை என 66 லட்சத்து 44 ஆயிரம் பேர் நீக்கம் பெரிய மோசடி; ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுக்கோட்டை: 'எஸ்ஐஆர் பணியின் போது முகவரி இல்லை என 66 லட்சத்து 44 ஆயிரம் பேர் நீக்கம் செய்யப்பட்டது பெரிய மோசடி' என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.புதுக்கோட்டையில் நிருபர்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது: எஸ்ஐஆர் ஐ நாங்கள் எதிர்க்கவில்லை. ஒரு ஊரில் 13 பேர் உயிருடன் இருக்கிறார்கள், அவர்கள் விடுபட்டு இருக்கிறார்கள். இறந்தவர்களை விட்டு விடலாம். இரட்டை பதிவை விட்டு விடலாம். முகவரியே இல்லாமல் இருக்கிறார்கள். உங்களுக்கெல்லாம் முகவரி இல்லாதவர்களை எத்தனை பேரை தெரியும். 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர் முகவரி இல்லாமல் இருக்கிறார்களா? எனக்கு முகவரி இல்லாதவர்களை யாரையும் தெரியாது. தூய்மை பணியாளர்கள் கூட ஏதோ ஒரு முகவரியில் இருக்கிறார்கள். தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒன்பது பேரில் ஒருவருக்கு முகவரியே கிடையாதா? இதைவிட ஒரு வேடிக்கையை நான் பார்த்ததே கிடையாது. இது மிகப்பெரிய மோசடி அதுவும் தமிழகத்தில் இது பின்தங்கிய மாநிலம் இல்லை. காட்டுப் பகுதி மாநிலம் அல்ல. வனப் பகுதி மாநிலம் அல்ல மலைப்பகுதி மாநிலம் அல்ல. பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்ற மாநிலம். எட்டு கோடி பேரில் 66 லட்சத்து 44 ஆயிரம் பேர் முகவரி இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் யாராவது நம்புவார்களா?. இறந்தவர்களை ஏற்றுக்கொள்கிறோம். இரட்டை பதிவை ஏற்றுக் கொள்ளலாம் முகவரி இல்லாமல் இருக்கிறார்கள் என்று சொன்னால் எப்படி நம்புவது?எஸ்ஐஆர் பணி செய்தது தமிழகஅரசு ஊழியர்கள் என்றாலும் அந்த பணி செய்யும் போது தேர்தல் கமிஷனின் ஊழியர்களாக இருப்பார்கள். எஸ்ஐஆர் பணி செய்பவர் தமிழக அரசு ஊழியர்களாக இருந்து செய்ய மாட்டார்கள். அந்த நாளுக்கு அந்த நேரத்திற்கு அவர் தேர்தல் கமிஷனின் ஊழியர். தேர்தல் கமிஷன் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். அவரை பதவியை விட்டு கூட நீக்கலாம். அதனால் அவர்களை தமிழக அரசு ஊழியர்கள் என்று நினைக்க வேண்டாம். மாவட்ட கலெக்டர் தற்போது இருக்கிறார் தேர்தல் அதிகாரியாக பணியாற்றும் போது அவரும் தமிழக அரசு பணியாளர் கிடையாது.திமுக அரசு கூட்டணியில் இருக்கிறோம் அவர்களுடன் தேர்தல் உடன்பாடு தொகுதி பங்கீடு காக ஐந்து பேர் குழு காங்கிரஸ் தலைமை நியமித்துள்ளது. ஐந்து பேர் குழு திமுக தலைவரை சந்தித்திருக்கிறார்கள். அவர் நான் ஒரு கமிட்டி அமைப்பேன் அப்போது இரண்டு குழுக்களும் பேசிக்கலாம் என்று கூறியுள்ளார். இரண்டு குழுக்களும் பேசி அவர்கள் தலைவர்களுக்கு அனுப்பிய பிறகு தலைவர்கள் பேசி முடிவெடுப்பார்கள். இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 57 )

ஸ்ரீ
டிச 27, 2025 07:13

நாய் ரொம்ப குரைக்கிறது


கிருஷ்ணன்
டிச 27, 2025 06:56

ஒரு காலத்தில் பெருமை மிகு, வியத் தகு, மனிதர் ?


inamar
டிச 26, 2025 23:40

வோட்டு திருடன் கதறுகிறார்..... சிவகங்கை சீமானே நீ ஜெயிச்சது இப்படித்தானா?


சிட்டுக்குருவி
டிச 26, 2025 22:13

நாடு சுதந்திரம் பெற்று 78 ஆண்டுகளாகியும் 66 லக்ஷம் மக்கள் முகவரி இல்லமால் இருக்கின்றார்கள் என்றால் மாநிலத்தை ஆளும் கட்சிகள் அல்லவா வெட்கப்படவேண்டும் .சமூக நீதி எப்படி செயகின்றார்கள் ?அரசின் நலன்கள் எல்லாம் இவர்களை எப்படி சேர்ந்தடைகின்றன ?எப்படி அவர்களின் உணவு உரிமையை பாதுகாக்கிண்றீர்கள் .?எப்படி அவர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டிருக்கின்றது ?முகவரி இல்லை என்றால் ஆதார் இல்லை.ஆதார் இல்லையென்றால் ரேஷன் இல்லை ?இவர்களுக்காக கணக்கீடு செய்யப்பட்ட மதிய அரசால் வழங்கப்படும் ரேஷன் எல்லாம் எங்கே போகின்றது ? இதையேயெல்லாம் ஆராயிந்து விடைபெற தங்களின் கூட்டாளிகளாக இருக்கும் ,பணநோயால் மனநிலைபாதிக்கப்பட்ட ஆட்சியாளர்களை கேட்டறிந்திடவேண்டும் ? செய்வீர்களா ?இல்லை நானும் அவர்களைபோன்றவன்தான் என்பீர்களா ?


GMM
டிச 26, 2025 22:05

தேர்தல் ஆணையம் nativity certificate கொடுக்கலாம் என்றதும், தமிழக செயலர் ஜன 25 வரை நேரடியாக வருவாய் துறை வழங்கலாம் என்ற அவசர அரசாணை பட்டியலில் பலரை சேர்க்க தான்? ஓட்டுக்கு பிறப்பு சான்று மாறாது. இருப்பிடம் பல முறை மாறும். பிறப்பு, தந்தை பிறந்த ஊர் அல்லது பள்ளி படிப்பு சான்று தான் சரியாக இருக்கும். ஏற்கனவே போலி வாக்காளர்கள் நுழைவு துவங்கி இருக்கும். வாக்கு பதிவு முன் பின் தணிக்கை அவசியம்.


kjpkh
டிச 26, 2025 21:45

முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் இப்படியெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. இது பொறுப்புள்ள பேச்சு அல்ல. ஏதோ மூன்றாம் தர பேச்சாளர் பேசுவது போல் இருக்கிறது.


xyzabc
டிச 26, 2025 21:32

இவரையும் லிஸ்டில் இருந்து நீக்கனும்..


M S RAGHUNATHAN
டிச 26, 2025 21:10

மொட்டை மாடியில் cabbage விளைச்சல் செய்து கோடிக்கணக்கில் வருமானம் பார்த்தீர்களே அந்த ரகசியத்தை சொல்லுங்கள் அய்யா. உங்களை மாதிரி ஒரு criminally intelligent and crooked மனிதன் இருக்க முடியாது. இந்த லட்சணத்தில் உங்களை Mr Clean என்று அழைத்து clean என்ற வார்த்தையை அவமானப் படுத்துகிறார்கள்.


m.arunachalam
டிச 26, 2025 21:08

அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு வழிமுறையை சொல்லலாமே. மணிப்பூர் மற்றும் சில மாநிலங்களில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வும் சொல்லுங்கள்.


M S RAGHUNATHAN
டிச 26, 2025 21:06

நீங்கள் currency printing machines பாகிஸ்தானுக்கு விற்றதை விட பெரிய மோசடி இந்தியாவில் யாரும் செய்ததில்லை. நீங்கள் மோசடி பற்றி பேசுகிறீர்கள். Fairgrowth Financials விவகாரத்தில் உண்மையில் உங்கள் பங்கு என்னது?


jss
டிச 27, 2025 09:21

இப்படி கஷட்டமான கேளவிகளை கேட்டு திணறடிக்காதீர்கள். நடந்த்து முடிந்தவையாகவே இருக்கட்டும் இனிமேல் நடப்பதில் எப்படி குளறுபடி செய்வது என்பதைப் பற்றி பேசுகிறார் கேளுங்கள் என்குறார் 63 முறை ஜாமீன் வாங்கிய சிவங்கங்கை சீமான்


சமீபத்திய செய்தி