உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமெரிக்க அருங்காட்சியகத்தில் பழனி செப்பேடு

அமெரிக்க அருங்காட்சியகத்தில் பழனி செப்பேடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பழனி: ''பழனி முருகன் கோவில் காலசந்தி பூஜைக்காக, 19ம் நுாற்றாண்டில் எழுதப்பட்ட செப்பேடு, அமெரிக்க அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டு உள்ளது,'' என, தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறினார்.அவர் கூறியதாவது:திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவில் காலசந்தி பூஜை, திருமஞ்சன கட்டளைக்காக எழுதப்பட்ட பல சமூகத்தினரின் செப்பேடுகள் உள்ளன. அவற்றில், 19ம் நுாற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு சமூக செப்பேடு, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மெட்ரோபாலிடன் அருங்காட்சியகத்தில், ஆசியப் பிரிவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.அதன் நகலை ஆராய்ந்ததில், தமிழில் எழுதப்பட்ட இச்செப்பேட்டை, 24 கொங்கு நாடுகளைச் சேர்ந்த ஒரு சமூக மக்கள், பழனி முருகனுக்கு நித்தியப்படிக்கு திருமஞ்சனம், சரமாலை, வில்வ அர்ச்சனைக்காக திருக்கணக்கு பண்டாரத்தை ஏற்பாடு செய்த தகவல் உள்ளது.இச்செப்பேடு, 34.3 செ.மீ., உயரம், 23.8 செ.மீ., அகலத்தில் உள்ளது. இரு பக்கமும், 119 வரிகளில் எழுதப்பட்டுள்ளது. முகப்பில் பொன்காளி அம்மனும், வேல், சந்திர, சூரியர்களுக்கு நடுவே அப்புச்சி, இடதுபுறம் முருகன் அமர்ந்த நிலையில் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 'வையம் நீடுக' எனும் பாடலுடன் துவங்கும் இதில், இரு பாடல்களில் முருகனின் புகழ் கூறப்படுகிறது.இதில், சாலிவாகன ஆண்டும், கலியுக ஆண்டும் தவறாக உள்ளது. கர ஆண்டு பங்குனி 16 திங்கட்கிழமை, பூச நட்சத்திரம் என, எழுதப்பட்டுள்ளது. கட்டையக் கவுண்டர் கோவில் குறிப்பின் அடிப்படையில், இச்செப்பேடு 19ம் நுாற்றாண்டில் எழுதப்பட்டுள்ளது.சின்னோப நாயக்கர், தவராச பண்டிதர், பழனியப்ப நம்பியார், பாணிபாத்திர உடையார், தலத்துக்கணக்கு காத்தசாமி, பாலைய சாமியார், பச்சகந்தையர், சம்மந்தமூர்த்தி முன்னிலையில் எழுதப்பட்ட இந்த செப்பேட்டில், முருகனின் புகழுக்கு பின், அக்குறிப்பிட்ட சமூகத்தினர் பழனி தண்டாயுதபாணி சுவாமிக்கு செய்தவை குறித்து கூறுகிறது.இச்செப்பேடு பழனியில் இருந்து, ஆங்கிலேய பெண்ணான கால்கன் என்பவரிடமிருந்து அமெரிக்கா சென்றது. அப்பெண்ணிடம் செப்பேடு சென்றது குறித்த விபரங்கள் தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

gmari servai
அக் 31, 2024 18:40

நல்ல பயன் உள்ள செய்தி


gmari servai
அக் 31, 2024 18:38

செப்பேடு என்பது வரலாற்றில் முக்கிய பங்கு வைக்கிறது. அதாவது அந்த இடத்தின் பெயர். அப்போது இருந்த சூழ்நிலை நமக்கு தற்போது சொல்லும் உண்மை ஆவணம். அந்த நாளில் பொய்யாகா எந்த செய்தியும் பதிவு செய்யவில்லை. கல்வெட்டு, மற்றும் செப்பேடு சிறந்த ஆவணம். கீழடியில் கிடைத்த செய்திக்கு உண்மையானது யாராலும் சொல்ல முடியுமா? ஆனால்கல்வெட்டு, செப்பு பட்டையம் முக்கிய ஆவணம்.. இன்று பலரின் குடும்பத்தில் அவரின் பாட்டனார் பெயர் தெரியாது? தமிழக 50 ஆண்டுகள் வரலாறு தவறாக பதிவு செய்யும் அவலம் உள்ளது


வைகுண்டேஸ்வரன்
அக் 27, 2024 12:26

19 ஆம் நூற்றாண்டில் செப்பேடா? மெட்டாலிக் பிரின்டிங், கார்விங் எல்லாம் வந்துடுச்சே. அப்புறம் எதுக்கு செப்பேடு, அதுவும் தேதி, திதி எல்லாம் தப்பு தப்பா போட்டிருக்கா? போயா யோவ் ஏதோ புருடா வுடறாங்க


Rasheel
அக் 27, 2024 12:15

கடந்த 70 ஆண்டுகளில் பகுத்தறிவு பல பழமையான கோவில்களின் சிலைகளையும், சிற்பங்களையையும், நகைகளையையும், பழங்கால செப்பேடுகளையும் விற்று காசு பார்த்துவிட்டது. ஒரு சினிமா டைரக்டர் மாட்டினார். அவர் கேசு என்ன ஆச்சு என்பது கடவுளுக்கே வெளிச்சம்.


Ravi
அக் 27, 2024 10:16

சமஸ்கிருதம் எங்க


venugopal s
அக் 27, 2024 07:44

இந்த செப்பேடு வெறும் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பானது, அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டு, அவ்வளவு தான். கீழடி போன்ற இடங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தமிழர் வரலாற்றை கண்டு பிடித்திருக்கும் போது இது அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு இல்லை!


Barakat Ali
அக் 27, 2024 10:51

அறிவோ அறிவு.... பழமை என்றும் பழமையே.... கீழடியில் இருந்தது போன்ற மூத்த நாகரிகங்கள் பல உண்டு .... செப்பேடு விஷயம் குறிப்பிட்ட மதம் சார்ந்ததாக இருப்பதால் இப்படி கருத்திடுகிறீர்கள் ... குறுகிய சிந்தனையில் இருந்து வெளிவர திராவிட மாடல் எப்பொழுதுதான் கற்குமோ .....


Kasimani Baskaran
அக் 27, 2024 07:02

நவபாஷாண சிலையை விற்கவில்லையே என்று சந்தோசப்பட்டுக்கொள்ள வேண்டும்.


Ravi
அக் 27, 2024 10:15

அதை தான் சொரண்டி வித்து திண்ணுட்டானுங்களே


J.V. Iyer
அக் 27, 2024 05:09

இனி தமிழகம், இந்தியாவில் உள்ள கோவில்களைப்பற்றிய செய்திகளை அறிய அமெரிக்கா செல்லலாம். கடத்தல் கும்பல்கள் செய்யும் அராஜகத்தை, அட்டூழியத்தை எப்போதுதான் நிறுத்துவார்களோ தெரியவில்லை. ஆனால், இன்னும் கொஞ்ச காலத்தில் தமிழகத்தில் உள்ள கோவில்களைவிட வெளிநாடுகளில் உள்ள கோவில்கள் அதிகமாக இருக்கும். இதற்கு காரணமான சனாதன எதிர்ப்பாளர்களுக்கும், பிராம்மண எதிர்ப்பாளர்களுக்கும், திராவிஷ கலகங்களுக்கும் நன்றி. கடவுள் எங்கும் இருக்கிறாரு குமாரு.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 27, 2024 02:43

அமெரிக்க பெண்ணுக்கு அதைக் கொடுத்தவரது / விற்றவரது விபரம் மட்டும் தெரியலையாம் ........