உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாக்காளர் திருத்த பணிகள்; பழனிசாமி அறிவுறுத்தல்

வாக்காளர் திருத்த பணிகள்; பழனிசாமி அறிவுறுத்தல்

சென்னை: 'அ.தி.மு.க., பூத் கமிட்டி அமைக்கப்பட்ட, மாவட்ட பொறுப்பாளர்கள், சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை கண்காணிக்க வேண்டும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: தமிழகம் முழுதும், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை, தேர்தல் கமிஷன் மேற்கொள்ள உள்ளது. அதன்படி, முறையான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கு ஏதுவாக, அ.தி.மு.க., சார்பில், சட்டசபை தொகுதி வாரியாக, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரி செய்வதற்கு, தேவையான உடனடி நடவடிக்கைகளை, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலர்கள் எடுக்க வேண்டும். அ.தி.மு.க., சார்பில், பூத் கிளை கமிட்டிகள் அமைக்க, மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அப்பணி முடிந்ததால் அப்பொறுப்பாளர்கள் விடுவிக்கப்பட்டனர். இப்போது வாக்காளர் திருத்தப் பணிகள் நடப்பதால், அப்பொறுப்பாளர்கள் வரும் நவ.,4ம் தேதி முதல் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை கண்காணிக்க வேண்டும். மாவட்டச்செயலர்களுடன் இணைந்து, முழுமையாக செய்து முடித்து, அதன் விபரங்களை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான நிர்வாகிகள் கூட்டம் வரும் 2ல், சென்னையில் நடைபெறு என பழனிசாமி அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி