வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உண்மையாகவே கழிசடை என்றால் இந்த R.S. பாரதிதான்
2026 ன் தோல்வி பயத்தில் உளறும் விடியல் ஆட்சி. "நாடகம் விடும் நேரம் தான் உச்சக் காட்சி நடக்குதம்மா வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலைநெருங்குதம்மா"
சென்னை: தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை:செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர், அமைச்சர் பதவியில் இருந்து விலகியதும், 'தி.மு.க., ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்துக்கான விதைகள் துளிர்விடத் துவங்கிவிட்டன' என, பழனிசாமி கூறியுள்ளார். பழனிசாமி, கட்சி தலைமை பதவி ஏற்ற பின், தொடர் தோல்விகளை சந்திப்பதில், புரட்சி செய்துள்ளார். தோல்வியில் சாதனை சரித்திரம் படைத்துவரும் தோல்விசாமி, அ.தி.மு.க.,வை பாதாள வீழ்ச்சிக்கு, அழைத்து சென்று கொண்டிருக்கிறார்.அ.தி.மு.க., ஆட்சியில், அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பு, பொது சொத்துக்குச் சேதம் ஏற்படுத்திய வழக்கில், தண்டனை பெற்றதற்காக, பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழந்தது போன்றவற்றை, பழனி சாமி மறந்து விட்டார்.தன் ஆட்சியை காப்பாற்ற, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தார். அவர் தி.மு.க., அமைச்சரவை குறித்து பேசாமல் இருப்பது, அவருக்கு நல்லது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
உண்மையாகவே கழிசடை என்றால் இந்த R.S. பாரதிதான்
2026 ன் தோல்வி பயத்தில் உளறும் விடியல் ஆட்சி. "நாடகம் விடும் நேரம் தான் உச்சக் காட்சி நடக்குதம்மா வேஷம் கலைக்கவும் ஒய்வு எடுக்கவும் வேலைநெருங்குதம்மா"