சென்னை:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, இன்று தன் பிரசார சுற்றுப்பயணத்தை துவக்குகிறார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, ஜோதிடர்கள் ஆலோசனைப்படி, இன்று பிரசாரத்தை துவக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழக சட்டசபை பொதுத்தேர்தலுக்கான ஆயத்தப்பணிகளை, அனைத்து கட்சிகளும் துவக்கி உள்ளன. பிரதான எதிர்க்கட்சியான, அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர் பழனிசாமி, 'மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில், தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தை இன்று துவக்குகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hmk0xkql&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில், இன்று தன் பிரசாரத்தை துவக்கும் பழனிசாமி, தன் முதற்கட்ட சுற்றுப் பயணத்தை 21ம் தேதி நிறைவு செய்கிறார். ஜோதிடர்கள் ஆலோசனைப்படி, அவரது பிரசார பயணம் திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.இது குறித்து, ஜோதிடர் திருக்கோவிலுார் பரணிதரன் கூறியதாவது: தற்போது, பழனிசாமிக்கு புதன் திசையில் கேது புத்தி நடக்கிறது. அவருடைய ஜாதக ரீதியாக, புதன், கேது இருவருமே சாதகமாக உள்ளனர். ராசிநாதன் புதன் என்பதும், புதனுடைய மிதுன ராசியில், கேது சஞ்சரிக்கிறார் என்பதும், அவரது பிறப்பு ஜாதக அமைப்பு. அதன் காரணமாக, கேதுவின் ஆதிக்க நாளான 7ம் தேதி பிரசாரத்தை துவக்குகிறார். அந்த தேதியின் கூட்டு எண், புதன் ஆதிக்க எண்ணான 5.இதுபோல், பயணத்தை நிறைவு செய்யும் ஜூலை 21ம் தேதி, குருவின் ஆதிக்க எண். ஒருவருக்கு ராஜயோகத்தை வழங்குபவர் குரு பகவான். எனவே, குருவின் ஆதிக்க எண்ணில், பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அவர் ஜாதகத்தில், கேது, குரு நட்பாக உள்ளனர். கேது புத்தியை தொடர்ந்து, சுக்கிரனும் உச்சமாக இருக்கிறார். சூரியனும் பவுர்ணமி யோகத்தை வழங்குகிறார். அதனால் முழுக்க முழுக்க, ஜாதகத்தை மையமாக வைத்து, ஜோதிடர்கள் ஆலோசனைப்படி, பழனிசாமி பிரசார பயணத்தை துவக்குகிறார். இவ்வாறு அவர் கூறினார்.