உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல்லடம் படுகொலை சம்பவம்; சி.பி.ஐ., விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

பல்லடம் படுகொலை சம்பவம்; சி.பி.ஐ., விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கடந்த நவ.,29ம் தேதி திருப்பூர் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: மக்களின் உயிருக்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை என்றால் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை போய்விடும். இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி, குடியரசு தலைவருக்கும், பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதுவோம். முதல்வர் ஸ்டாலினுக்கும் கடிதம் எழுதுவோம். தமிழக போலீசாருடன் சி.பி.ஐ., இணைந்து கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். இதுவரை இந்தியாவிலேயே இதுபோன்று கிடைக்காத மாதிரி தண்டனை மிக வேகமாக வழங்க வேண்டும். ஆயுதங்களைத் தூக்குபவர்களுக்கு எல்லோருக்கும் முதலும், முடிவுமாக இந்தத் தண்டனை இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் கருத்து. பத்திரிக்கையாளர்களும் இந்த விஷயத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும். அப்போது தான் நியாயம் கிடைக்கும். இதன்மூலம், ஜனநாயகத்தின் மீது நமக்கு நம்பிக்கை வரும். போதை கலாசாரத்தை ஒழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. போதை இல்லாமல் யாராவது இவ்வளவு கொடூரமான கொலைகளை செய்திருப்பார்களா? இளைஞர்கள் நகரங்களை நோக்கி சென்று விட்டதால், கிராமங்களில் வயதானவர்கள் தான் இருக்கிறார்கள். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, போலீசார் இரவு நேரங்களில் கிராமப்புறங்களில் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். கிராமப்புற காவல்நிலையங்களுக்கு முதல்வர் ரோந்து வாகனங்களை வாங்கிக் கொடுக்க வேண்டும், எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

joe
டிச 07, 2024 14:50

வேறு பகுதியில் தவறு செய்து விட்டு பல்லடத்திலும், திருப்பூரில் தவறு செய்து விட்டு பல்லடத்தில் குற்றவாளிகள் பதுங்குகிறார்கள். ஆனால் எந்த காவல் நிலையமும் இது பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை .


joe
டிச 07, 2024 14:47

பல்லடம் காவல் துறை குற்றவாளிகளை பற்றி சொன்னால், அது எங்கள் எல்லையில் வராது. குற்றவாளிகள் பல்லடம் பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்கிறார்கள் என்று சொன்னால் அவர்கள் செய்யும் குற்றம் எங்கள் எல்லையில் இல்லை என குற்றவாளிகளுக்கு ஆதரவு தருகிறார்கள். இதுதான் பல்லடத்தில் நடந்து கொண்டிருக்கிறது.


Sudha
டிச 06, 2024 21:29

இன்னும் கொல்கத்தா சம்பவம் கோர்ட்டுக்கு வரவில்லை யுவர் ஹொனோர்


வைகுண்டேஸ்வரன்
டிச 06, 2024 19:23

இது ஒரு fashion. எதுக்கெடுத்தாலும் சி பி ஐ கிட்ட குடு என்று சொல்வது. அவங்க அப்பிடியே நட்டுத் தள்ளிருவாங்க.


sankar
டிச 06, 2024 21:01

அப்புறம் என்ன உங்ககிட்டயா கொடுக்கமுடியும் இருநூறு


vadivelu
டிச 07, 2024 07:35

சங்கர் , அவரை குறைவாக மதிப்பீடு செய்யாதீர்கள், இருநூறு இல்லை, இருநூற்று ஒன்று.


Sivagiri
டிச 06, 2024 19:04

தொழில் நகரங்களுக்கு அருகில் இருக்கும் , விவசாய நிலங்கள் வைத்திருக்கும் குடும்பத்தினர் , நிலங்களை விற்க , பல வகைகளில் தொல்லை கொடுக்கப்படுகிறது - பின்னர் மிரட்டப்படுகின்றனர் - வாழ விடாமல் செய்யப்படுகிறார்கள் , கொஞ்சம் தனியாக இருப்பவர்கள் கொலை அல்லது தற்கொலை செய்யப்படுகிறார்கள் , நகைக்காக , அல்லது குடும்பத்தகராறு , கடன்தொல்லை , அப்டி இப்டி என்று கதை கட்டிவிட்டு கேஸை க்ளோஸ் செய்யப்படுகிறது . . .


Kudumi
டிச 06, 2024 16:39

திருட்டு திராவிடத்தை நீங்கள் இன்னும் நம்பும் போது CBI ஐ நம்புவதில் என்ன தப்பு


சம்பா
டிச 06, 2024 15:48

எதிவிசாரிச்சா என்ன பத்து வருடமோ இருபது வருடமோ யார்கண்டார


Kabil
டிச 06, 2024 15:44

Mr Annamalai, please request Prime Minister to pass a suitable legislation in parliament to restore the original status to Central Government to order for CBI investigation


அப்பாவி
டிச 06, 2024 15:32

இன்னுமா சி.பி.ஐ ய்சி நம்புறீங்க? பேசாம உங்ஜ இன்ஃப்ளூயன்சை உபயோகிச்சு இங்கிலாந்து ஸ்காட்லாந்து யார்டு போலீசை உட்டு விசாரிக்க சொல்லுங்க.


Palanisamy Sekar
டிச 06, 2024 15:00

சிபிஐ வழக்கு என்றாலே அலர்ஜி இந்த அரசுக்கு. எல்லாவழக்குகளுக்கும் சிபிசிஐடி க்கு கொடுத்துவிட்டு ராமஜெயம் வழக்கை போல கிடப்பில் போட்டுவிட்டு குற்றவாளி யார் என்று தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் வைத்துக்கொள்ளவே திமுக என்றுமே முன்னெடுக்கும். யாரோ ஒருவர் ஜெயிலில் இருந்துவந்தார் அப்புறமா கோவைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் அந்த அவருக்கு தெரியுமா இந்த கொலைகள் பற்றிய தகவல்கள் என்றால் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் என்று பொதுமக்களிடையே ஒரு கருத்து நிலவுகின்றதாம். அண்ணாமலையார் முன்னெடுக்காமல் போனால் இன்னோர் ராமாயஜாம் வழக்காக மாறிடுமோ என்றுதான் அஞ்சுகின்றோம்