உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பஞ்ச துவாரகா சுற்றுலா ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கிருஷ்ணரின் அவதார வாழ்வின் ஐந்து முக்கிய நிலைகளை காணும் வகையில், 'பஞ்ச துவாரகா' சுற்றுலா ரயில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து நவம்பர் 25ம் தேதி இயக்கப்படுகிறது. அங்கிருந்து புறப்பட்டு, கோவை போத்தனுார், மதுரை, ஈரோடு, சேலம், சென்னை வழியாக, அந்த ரயில் குஜராத் செல்லும். பின், அங்குள்ள துவாரகா, டாகோர் துவாரகா, நாத்துவாரகா, பெட் துவாரகா மற்றும் ராஜஸ்தானில் உள்ள கன்க்ரோலி துவாரகா என, பஞ்ச துவாரகைகளை தரிசிக்கலாம். சர்தார் வல்லபபாய் படேலின் ஒற்றுமை சிலை, ஸ்ரீ ராமானுஜரின் சமத்துவ சிலையையும் பார்க்கலாம். இதேபோல, நவம்பர் 25ல் துவங்கும் மற்றொரு சுற்றுலா ரயிலும், எர்ணாகுளத்தில் புறப்பட்டு மேற்கண்ட நகரங்கள் வழியாக, ராஜஸ்தான் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் கோல்கொண்டா கோட்டை, ஜோத்பூர் உமைத் பவன் அருங்காட்சியகம், ஜெய்சால்மர் ஜெயின் கோவில், ஜெய்சால்மர் கோட்டை, சாம் மணல் குன்றுகள், ஜெகதீசர் கோவில் உள்ளிட்டவற்றை காண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம், 13 நாட்கள் கொண்டதாக இரு சுற்றுலா திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. குறைந்தபட்சமாக, 41,150 முதல் அதிகபட்சமாக 63,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் பெற, 73058 58585 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை